Header Ads



ஆசியாவின் சிறந்த இளம் தொழில், முனைவோர் பட்டியலில் இலங்கையர்

உலக புகழ்பெற்ற சஞ்சிகையாக கருதப்படும் போர்ப்ஸ் சஞ்சிகையினால் பிராந்தியத்தின் சிறந்த இளம் தொழில் முனைவோரை பட்டியலிடும் வேலைத்திட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் சிறந்த 30 இளம் தொழில் முனைவோர் பட்டியலில் இலங்கை இளைஞர் ஒருவர் இடம் பிடித்துள்ளார்.

ரக்கித மாலேவன என்ற இளைஞரே குறித்த 30 பேருக்குள் இடம்பிடித்துள்ளார்.

ஆசிய பிராந்தியத்தில் 30 வயதிற்கு குறைவான சிறந்த இளம் தொழில் முனைவோர் இதன் ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு நெனோ தொழில்நுட்பத்தின் ஊடாக HIV/AIDS நோய்க்கு சிகிச்சை ஒன்றை கண்டுபிடிப்பதற்கு அவசியமான வியூகம் ஒன்றை தயாரித்தமைக்காக ரக்கித மாலேவன என்ற இளைஞரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியிருந்தார்.

அவர் Forbes 30 Under 30 என்ற பட்டியலில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாட துறைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அவர் கொழும்பு நாலந்தா பாடசாலையின் பழைய மாணவராகும். அத்துடன் அவர் ideanerd SL என்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.