Header Ads



மீன் வியாபாரிக்கு கோடிகள் குவிந்தது எப்படி..? முதலமைச்சரின் பதிலடி

ஏழு மாடிகள் அல்ல பத்து மாடிகள் கெண்ட ஹோட்டல் ஒன்றையே தாம் அமைப்பதாக ஊவா மாகண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.

மக்கள் பணத்தில் ஹோட்டல் அமைப்பதாக சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஆம் நான் ஹோட்டல் ஒன்றை அமைக்கின்றேன், அது ஏழு மாடிகளைக் கொண்டதல்ல, பத்து மாடிகளைக் கொண்டது.

நான் எவ்வாறு ஹோட்டல் அமைக்கின்றேன் என்பதனை வங்கிகளிடம் கேட்டறிந்து கொள்ள முடியும்.

ஹோட்டல் அமைப்பதற்கு வங்கிக் கடன்கள் பெற்றுக்கொண்டுள்ளேன்.

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ள ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த ஹோட்டல் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஹோட்டல் அமைப்பதற்கு வங்கி கடன் வழங்கியது.

நான் வடை விற்றது உண்மைதான். எனினும் என் மீது குற்றம் சுமத்தும் சமிந்த விஜேசிறியின் தந்தை மீன் விற்பனை செய்தார்.

83 கலவரத்தின் போது கண்டு பிடிக்க முடியாமல் இருந்தவர்களுக்கு எவ்வாறு ஹோட்டல்களும் சொத்துக்களும்.

பதுளையில் கோடிக் கணக்கான பெறுமதியுடைய கடையொன்று அவருக்கு உண்டு.

இவ்வாறு அவர் எவ்வாறு சொத்துக்களை குவித்தார் என்பதனை முதலில் அம்பலப்படுத்தட்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடை விற்ற முதலமைச்சர் 7 மாடியில் ஹோட்டல் - ஜனாதிபதியிடம் முறையிட்டும் பயன் இல்லை

No comments

Powered by Blogger.