Header Ads



பைத்துல் முகத்தஸ் செல்ல, இலங்கையர்களுக்கு வாய்ப்பு


இஸ்ரேல் நாட்டின் விசா பெறாது, பைத்துல் முகத்தஸ் செல்ல இலங்கையர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க தயாரென ஜோர்தான்  அரசு அறிவித்துள்ளது.

ஜோர்தானுக்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களிடமே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் லாபிர் மற்றும் இலங்கை ஊடகவியலாளர்கள் ஜோர்தான் சுற்றுலா சபையின் தலைவர்  டாக்டர் ஆபேத ரசாக் அரேபியாவை. இன்று புதன்கிழமை 12 ஆம் திகதி சந்தித்தனர்.

இதன்போதே இஸ்ரேல் நாட்டின் விசா பெறாது, பைத்துல் முகத்தஸ் செல்ல இலங்கையர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க தயாரென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  ஜோர்தானில் 5 நபிமார்கள் அடங்கப் பெற்றுள்ளதுடன், பல சகாபக்களின் கபுறுகள் உள்ளதாகவும், அழகு நிரம்பிய இயற்கை பிரதேசங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் மக்கா அல்லது மதீனா வரும் இலங்கையர்கள் ஜோர்தானுக்கும் வந்துசெல்ல முடியுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


1 comment:

  1. Rare opportunity visiting Al Aqsa .
    Jazakhalahr Lafeer , Ameen sab n other brothers.

    ReplyDelete

Powered by Blogger.