Header Ads



நியூசிலாந்தில் சிறந்த இளைஞராக, இலங்கை முஸ்லிம் சகோதரர் தெரிவு


(நியூசிலாந்திலிருந்து  MJM. Sharthaar)

நியூசிலாந்தின் "ஸ்பைனல் கோர்ட் சொஸைட்டி" எனும் அரச சார்பற்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் அதன் ஆராய்ச்சிகளுக்குமான இணைய வழிதளங்களை இலகுபடுத்தி கொடுத்தமைக்காக, இலங்கையில் மன்னாரை பிறப்பிடமாக கொண்ட, நியூசிலாந்தில் "டனீடன்" பகுதியில் வசிக்கும் பௌஸான் டினுன்ஹான் என்ற 24 வயது இளைஞருக்கு நியூசிலாந்து பாராளுமன்றத்தில் இளைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான "பெஸ்ட் யூத் அவர்ட் - 2017" விருது, இளைஞர் விவகார அமைச்ச்ர கௌரவ நிக்கி கெய் அவர்களால் வழங்கி வைக்க‌ப்பட்டுள்ளது. 

இவர் ஒட்டாகோ யுனிவர்சிட்டியில் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் அங்கு செயல்படும் "ஒட்டாகோ முஸ்லிம் அஸ்ஸோஷியேஷனின்" பொருளாலராகவும் கடமையாற்றுகின்றார். சர்வதேச அளவில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது சந்தேக பார்வை விழுந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், இவர் தான் வாழும் நாட்டுக்காக தனது அர்ப்பணிப்பை செய்தமைக்காக அரச விருது வழங்கி கௌரவிக்கபடுவதானது வெளி நாட்டு வாழ் இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்லாது, இலங்கை இளைஞர்களுக்கும் இது ஒரு வழிகாட்டுதலாகும். 

இவ்வாரான ஒரு அரச விருது நியூசிலாந்தில் இஸ்லாமிய சமுக இளைஞர் ஒருவருக்கு வழங்கப்பட்டதும் இது முதல் முறையாகும். அந்த வகையில் அவர் இலங்கை நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். 



1 comment:

Powered by Blogger.