சோமாலியா முழுவதும் போர்ப் பகுதியாக அறிவிப்பு
சோமாலியா நாடு முழுவதையும் போர்ப் பகுதியாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.
அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அல்-ஷபாப் குழுவினர் அந்நாட்டில் அடிக்கடி தாக்குதல்கள் நிகழ்த்தி வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது அப்துல்லாஹி முகமது இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், ராணுவத்தின் மூத்த தளபதிகள் அனைவரையும் மாற்றி வியாழக்கிழமை உத்தரவிட்டார். காவல் துறை, உளவுத் துறை போன்ற அமைப்புகளுக்கும் புதிய தலைவர்களை அறிவித்தார்.
பயங்கரவாதிகள் சரணடைய 60 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், அவர்கள் பணிய மறுத்தால் புதிய தாக்குதலைத் தொடங்கப் போவதாகவும் அதிபர் அறிவித்தார்.
Post a Comment