Header Ads



சாப்பிடுவதில் உணர்ச்சிவசப்படுகிறீர்களா..?

டென்ஷனா இருக்கு... ஒரு தம் அடிச்சுட்டு வர்றேன்’ என்று கூட்டத்திலிருந்து அவ்வப்போது நழுவுகிறவர்கள் நிறைய உண்டு. ‘மனசு கஷ்டமா இருக்கு... என்று சொல்பவர்களையும் அதிகமாகப் பார்க்கிறோம்.இந்த இரண்டு தவறான பழக்கங்களைப் போன்றதுதான் உணர்ச்சி வேகத்தை உணவில் காண்பிப்பதும். கோபம், அன்பு, துக்கம் போன்ற உணர்ச்சிகளை உணவின் மீது பலர் திருப்புவது சாதாரணமான விஷயம் அல்ல. அது Emotional Eating Disorder’’ என்கிறார் உணவியல் நிபுணரான வினிதா கிருஷ்ணன். அது என்ன எமோஷனல் ஈட்டிங் டிஸார்டர்?அன்பு, துக்கம், கோபம் போன்ற தங்களுடைய தீவிரமான மன உணர்ச்சிகளுக்கு உணவை வடிகாலாக பயன்படுத்தும் முறைதான் எமோஷனல் ஈட்டிங் டிஸார்டர். எளிமையாகச் சொன்னால், சாப்பிடுவதில் இருக்கும் கோளாறையே எமோஷனல் ஈட்டிங் என்று சொல்கிறோம்.

சாதாரணமாக ஒருவர் சாப்பிடுவதற்கும், உணர்ச்சி கொந்தளிப்பில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் உண்டு. இந்தப் பழக்கம் உங்களிடம் இருக்கலாம் அல்லது உங்களைச் சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களிடமும் இருக்கலாம். அந்த வித்தியாசத்தை கண்டுபிடிக்க ஓர் எளிமையான வழி இருக்கிறது.ஒருவர் என்ன தன்மை உள்ள உணவின் மீது அதிகம் விருப்பத்துடன் இருக்கிறார், என்ன மாதிரியான சுவை உள்ள உணவை அதிகம் விரும்புகிறார் என்பதை வைத்து அவருடைய பிரச்னையைக் கண்டுபிடித்துவிட முடியும்.இனிப்பு‘எதையாவது சாதித்தே ஆக வேண்டும்’ என ஓடிக்கொண்டே இருப்பவர்கள், தங்களுடைய லட்சிய வேகத்தில் நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களின் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். இதனால் இனிப்பு உணவுகளை அதிகம் உண்பார்கள். அதிகமாக டீ, காபி, ஜூஸ் சாப்பிடுகிறவர்களையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

இதுபோல் சர்க்கரை அதிகம் உள்ள உணவால் உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு உள்பட பல தொந்தரவுகளுக்கு அவர்கள் ஆளாக வாய்ப்பிருக்கிறது.பிஸியான வேலை நேரத்துக்கிடையிலும் தங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி ரிலாக்ஸ் செய்துகொண்டால் தேவையற்ற இனிப்பு உண்பதைத் தவிர்க்க முடியும். வேளா வேளைக்கு உணவு சாப்பிடும் வழக்கத்தை கொண்டு வரும்போது இந்த இனிப்பு உண்ணும் பழக்கம் மாறிவிடும்.    

காரம், ஏதாவது சாகசம் செய்யவேண்டும் என விரும்புகிறவர்களும், கோபத்தை வெளிப்படுத்தத் தெரியாதவர்களும் காரமான உணவை அதிகம் விரும்புவார்கள். இதனால் வயிற்றுப்புண் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. இவர்கள் ஏதாவது ஒரு டான்ஸ் கற்றுக் கொண்டு ஆடும் வழக்கத்தைப் பின்பற்றினால் அந்த உணர்ச்சி வேகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.

உப்பு, வாழ்க்கை போகிற போக்கிலேயே ஓடிக்கொண்டு இருப்பவர்கள் அதிகம் உப்பு கலந்துள்ள உணவை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவர்கள் மூச்சுப்பயிற்சி செய்து பதற்றத்தைக் குறைத்தால் உப்பு உணவுகளைத் தவிர்க்க முடியும்.

No comments

Powered by Blogger.