ஓடும் அம்புலன்ஸ் வண்டியில், இரட்டை குழந்தைகள் பிறந்தன
ஓடும் அம்புலன்ஸ் வண்டியில் பெண்ணொருவர் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார்.
தெனியாய பிரதேசத்தில் இன்று -14- காலை 7 மணியளவில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
தெனியாய பிரதேசத்தில் 1990 என்ற அவசர சிகிச்சை வழங்கும் அம்புலன்ஸ் வண்டியில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
அனிலகந்த என்ற பகுதியில் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளமையை அடுத்து, தெனியாய பிரதேச வைத்தியசாலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவினால், அம்புலன்ஸ் வண்டி ஒன்று அனில்கந்த பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பெண்னை அம்புலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் தனது முதலாவது குழந்தையை பிரசவித்துள்ளார்.
இரண்டாவது குழந்தையை தெனியாய வைத்தியசாலையின் நுழைவாயிலில் அம்புலன்ஸ் வண்டியினுள் பிரசவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அம்புலன்ஸ் வண்டியில் வைத்திய அதிகாரிகள் சிலர் சென்றிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment