Header Ads



இலங்கை முஸ்லிம்கள் பற்றி, சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரம்..!

அன்புக்குரிய  சகோதரர்களே  
அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ்மதுல்லாஹி  வபரகா துஹு.

சமூக  ஊடகங்களை (Social Media) பயன்படுத்தி எமது  சகோதர  இனத்தவர்களின்  குறிப்பிட்ட சில  குழுக்கள்,  மற்றும்  அமைப்புக்கள் எமது  சமூகத்தினைப்  பற்றி    மோசமான  வகையில் மிகவும்  நூதனமாகவும்,  திட்டமிட்ட  அடிப்படையிலும் செயற்பட்டு  கருத்துக்களைப்  பரப்பி வருகின்றனர். இதற்காக  பல ஊடக  வலைப் பின்னல்  அவர்களால் வரையப்படுள்ளன.

இது  நாளுக்குநாள்  அதிகரித்த  வண்ணமே  இருக்கிறது. 

இந்நிலையில்  நாம்  எமது அரசியலையும்,  அவர்களது  செயற்பாடுகளையும், மற்றும்  எம்மிடையே உள்ள குழுக்களையும் பற்றி வசை  பாடும்  நடவடிக்கைகளுக்கே   முதன்மை கொடுத்து  இந்த சமூக  வலைத்தளங்களை    பயன்படுத்தி வருகின்றோம்.

நாம்  எல்லோரும்  ஒன்று  சேர்ந்து  பக்குவமான  அடிப்படையில் எம்  மத்தியில்  உள்ள  வேற்றுமைகளை    மறந்து  சமூகம்  சார்ந்த  விடயங்களையும்,  அது  பற்றி சொல்லப்படும்  பிழையான கருத்துக்களுக்கு  நாகரீகமான  முறையில் இஸ்லாத்தில்  நிழலில்  பதில்  உரை வழங்க  இந்த  ஊடகத்தினை  பயன்படுத்துவோம். 

மொழி  ஆளுமை  உள்ளவர்கள்  கவர்ச்சிகரமாக  தமது  கருத்துக்களை  முன்வைத்து  எம்மை  எதிர்  கொண்டுள்ள   ஊடக  பயங்கர வாதத்தினை  தோற்கடிப்பதில்  முயற்சிப்போம். 

எமது  பெயரில்  இயங்கும்  வலையத்தளங்கள் (Net News) எம்மிடையே  அண்மைக் காலமாக தோன்றியுள்ள  தரமற்ற  எழுத்துக்களையும்,  மற்றும்  செய்திகளையும்  பிரசுரிப்பதற்குப் பதிலாக எமது  நாட்டில்  நாம்  எல்லோருடனும்  சேர்ந்து  வாழ் வதற்கான    நல்ல  சிந்தனைகளையும்,  இஸ்லாத்தில்  சொல்லப்படட  சகவாழ்வு  பற்றியும் இன ஐக்கியத்தினை  வலியுறுத்தியும்   எமது  கருத்துக்களை  வழங்க  முயற்சிப்போம். 

இந்த  நிலை  தொடருமேயானால்  எமது  சந்ததியினர் எதிர்  காலத்தில் எமது  நாட்டில்  வாழ  மிகுந்த  விலை  கொடுக்கவேண்டிய  நிலை  ஏற்படும். 

அல்லாஹ்  எம்மை  பாதுகாப்பானாக  

எம்.எல். பைசால்  காஷிபி

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Powered by Blogger.