என்னை கொலை செய்யாவிட்டால் சரணடையத் தயார் - அங்கொட லொக்கா அறிவிப்பு
பாதாள உலகக்குழு தலைவர் அங்கொட லொக்கா சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார்.
அண்மையில் களுத்துறையில் சமயங் உள்ளிட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் மற்றும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் படுகொலைச் சம்பவத்துடன் அங்கொட லொக்காவிற்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கொட லொக்கா தற்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடு ஒன்றிலிருந்து பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பினை ஏற்படுத்தி சரணடைய விரும்புவதாக அறிவித்துள்ளார்.
இந்தோனேசியாவிலிருந்து இந்த அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்மை கொலை செய்யாவிட்டால் சரணடையத் தயார் என அங்கொட லொக்கா தெரிவித்துள்ளார்.
நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் எனவும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் பொலிஸ் உயரதிகாரிகள் அங்கொட லொக்காவிற்கு அறிவித்துள்ளனர்.
Post a Comment