வெள்ளத்தில் சிக்கிய பெண், ஹெலிகெப்டரில் பிள்ளை பெற்றார்
பெரு நாட்டில் அண்மையில் பெய்து வரும் கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய பெண்ணிற்கு வானில் குழந்தை பிறந்துள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதில் ஒரு பகுதியான Lambayeque-ல் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைவீதிகள் போன்றவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, ஏராளாமான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அவைகள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்காக, பேரிடர் மீட்பு குழு விரைந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் Pingo (20) என்ற கர்ப்பிணிப் பெண் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பின்கோவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நீர் சூழ்ந்து காணப்படும் இடத்திற்கு, ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.
அதன் பின் அப்பெண்ணை பத்திரமாக மீட்டுக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஹெலிகாப்டரிலேயே பின்கோவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
Post a Comment