தன்னிடம் ரசாயன ஆயதங்கள், இல்லை என்கிறான் அசாத்
சிரியாவில் இந்த மாத தொடக்கத்தில் தன்னுடைய படைகள் நடத்தியதாக கூறப்படும் ரசாயன ஆயுத தாக்குதல் குற்றச்சாட்டை, அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத் மறுத்துள்ளார்.
பொதுமக்கள் பலர் இந்த ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி தரும் விதமாக சிரியா அரசின் விமான தளம் மீது அமெரிக்கா வான்வழித்தாக்குதலை நடத்தியது.
கான் ஷெய்க்கூன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அசாத் அளித்துள்ள முதல் பேட்டியில், இதுப்போன்ற குற்றச்சாட்டுக்கள் 100 சதம் புனையப்பட்டது என்று பிரெஞ்சு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக சிரியா வசம் எவ்வித ரசாயன ஆயுதங்களும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் எந்த ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டாலும் பாரபட்சமானது என்று சிரியா அதிபர் தெரிவித்துள்ளார்.
Post a Comment