Header Ads



'ஹூருல் ஈன்' எனும், அழகுமிக்க பெண்கள் வேண்டுமா..?

முஆத் பின் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்;

ஒருமனிதன் சினத்தைச் செல்லுபடியாக்க ஆற்றல் பெற்றிருக்கும் நிலையிலும் அதனை மென்று விழுங்கினால் அவனை மறுமை நாளில் எல்லாப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அல்லாஹ் அழைப்பான். ஹூருல் ஈன் எனும் அழகுமிக்க (சுவனத்துப்) பெண்களில் அவன் விரும்புகிறவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு அனுமதி அளிப்பான். (நூல்: அபூ தாவூத், திர்மிதி)

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றார்கள். மீண்டும் அறிவுரை கூறுமாறு பல தடவை அவர் கேட்டதற்கும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ கோபம் கொள்ளாதிருப்பாயாக என்றே பதில் அளித்தார்கள்! (நூல்: புகாரி)

அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்: விசுவாசம் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் – அவர்களுடைய உயிர், பிள்ளைகள் மற்றும் செல்வம் ஆகியவற்றில் கஷ்டம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது! (அவர்களுடைய தவறுகளுக்கு அது பரிகாரமாகி விடுவதால்) இறுதியில் அவர்கள் மீது எவ்வித் தவறும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கிறார்கள்! (நூல்: திர்மிதி) [ ஹதீஸ் 47. 48, 49 - ரியாளுஸ் ஸாலிஹீன் ]

தெளிவுரை

இம்மூன்று நபிமொழிகளும் பொறுமையின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.

முதல் ஹதீஸின் கருத்து : நியாயமாக நடவடிக்கை எடுத்து தனது சினத்தைத் தீர்க்க ஆற்றல் பெற்றிருந்தும் ஒருமனிதன் சினத்தை அடக்குகிறான். பொறுமையை மேற்கொள்கிறான் எனில் அதற்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான பரிசு உள்ளது!

அரபியில் அல் ஃகைள் – الغيظ என்றால் கடும்கோபம் அதாவது சினம் என்று பொருள். தனது சினத்திற்குப் பழிதீர்க்க வலிமை இல்லாதவன் சினத்தை மென்று விழுங்கினான் என்று சொல்லப்படுவதில்லை! கோபம் எனும் சொல்கூட ஆற்றலை வெளிப்படுத்தும் வார்த்தையே! ஆனால் துயருறுதல் எனும் வார்த்தையில் பலவீனத்தின் பொருள் உள்ளது. அதனால்தான் கோப நிலை – அது தன்னைப் பொறுத்து பூரணமான ஒன்றெனக் கூறப்படுகிறது!

இந்த ரீதியில்தான் அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று சொல்வது சரிகாணப்படுகிறது. ஆனால் அல்லாஹ் துயரப்படுகிறான் என்று சொல்லப்படுவதில்லை! ஏனெனில் நினைத்ததை நிறைவேற்ற முடியாத பொழுதுதான் துயரப்படும் நிலை வருகிறது! அல்லாஹ்வோ எல்லா ஆற்றல்களும் கொண்டவன்!

ஆக! கடுமையாகக் கோபம் கொண்ட ஒருமனிதன் தனது சினத்திற்குப் பழி வாங்கும் சக்தி பெற்றிருந்தும் பொறுத்துக் கொள்கிறான். சகித்துக் கொள்கிறான் என்றால் அது அல்லாஹ்விடத்தல் மிகவும் பிரியமான நற்குணமாக மதிக்கப்படுகிறது!

இரண்டாவது ஹதீஸின் கருத்து : அறிவுரை கேட்டுவந்த அந்த மனிதருக்கு மூன்று தடவையும் கோபம் கொள்ளாதே என்பதையே அறிவுரையாக நபியவர்கள் கூறியதற்குக் காரணம் அந்த மனிதர் அதிகம் கோபம் கொள்ளும் சுபாவம் உடையவராக இருந்தார் என்பதுதான்! எனவே அவரது பலவீனத்திற்கேற்ப அவருக்குப் புத்திமதி கூறுவதே பொருத்தம்! நோய்க்கேற்ற மருந்து வழங்குவதில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைதேர்ந்தவர்கள்! பொறுமைப் பண்பே எந்நிலையிலும் சிறப்புக்குரியது என்பதையே இது காட்டுகிறது!

மூன்றாவது ஹதீஸின் கருத்து : மனிதனுக்கு பல்வேறு விதங்களில் தொல்லைகள், துன்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை அவனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் அவனுடைய பிள்ளைகளுக்கும் ஏற்படுகிற நோய்நொடிகள், கஷ்டங்கள்! இவ்வாறு தொடர்கிற துன்பங்கள் மனிதனின் பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றன! பிறகு அவன் பூமியில் நடந்து செல்கிறான்., அவன் மீது எவ்விதப் பாவங்களும் குற்றங்களும் இல்லாத நிலையில்! ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அதுதான் பொறுமை! பொறுமை கொள்வதற்கு மாறாக அந்த மனிதன் கோபம் கொண்டால் கோபத்தின் விளைவுதான் அவனுக்குக் கிடைக்கும்!

-Islamkural-

20 comments:

  1. இஸ்லாமும், முஹம்மது நபி (ஸல்) அவர்களும் கடுமையாக விமர்சிக்கப்படும் இந்தக் காலத்தில் இப்படி ஒரு தலைப்பும், இப்படி ஒரு செய்தியும் தேவையா? இஸ்லாம் என்றாலே ஒரு மாதிரியான மார்க்கம் என்று நாமும் தூக்கிக் கொடுக்க வேண்டுமா? தயவு செய்து சிந்தியுங்கள். அறிவியல் பூர்வமான விடயங்களை முன்வையுங்கள், அது போதும். கிளுகிளுப்பான விடயங்களை முன்வைக்காதீர்கள்.

    ReplyDelete
  2. foolish comment from Amji Haniya.

    Its a good article about the toleration.

    ReplyDelete
  3. நாம்த கல்வி வளர்ச்சி, அறிவியல்வ நோக்கிய சமூகமாக மாற வேண்டும். கனவு கண்டு கற்பனையில் காலம் கழிக்கும் சமூகமாக இருக்கக் கூடாது. முதலில் நமது உலமாக்கள் "லெப்பை" லெவலில் இல்லாமல், அறிவாளிகள் லெவலுக்கு மாற வேண்டும். இந்த தலைப்பு மிகவும் தவறானது, இது ரெட் லைட் ஏரியாவுக்கு விளம்பரம் போட்டது போன்று இருக்கின்றது. இதன் பிறகு வேண்டாமே இப்படியான தலைப்புக்கள்.

    ReplyDelete
  4. இஸ்லாத்தை சொன்னா சிலருக்கு கோபம் வருகிறது வேறு சிலருக்கோ பயம் வருகிறது இது ஒன்றும் கற்பனைக் கதயில்லை ஹதீஸ் நபிஸல் அவர்களின் போதனை

    ReplyDelete
  5. Patience is the virtue.
    Masha Allah, excellent article to testify folk's forbearance.

    ReplyDelete
  6. Patience is the virtue.
    Masha Allah, excellent article to testify folk's forbearance.

    ReplyDelete
  7. Unknown...Amji is absolutely right about his comment on the caption. I have heard in heaven you will have your wife and kids and parents in all same age (if they are saaliheen). In another place I have read that the wives will have their real prettiness. Then why Hoorleens? And the caption is inducing your internal desire for pretty women...come on.

    ReplyDelete
  8. சுவர்க்கம் போகும் ஆண்களுக்கு "ஹூருல்ஈன்" பெண்கள் உண்டு. சுவர்க்கம் போகும் பெண்களுக்கு "ஹூருல்ஈன்" ஆண்கள் உண்டா? ஆதாரத்துடன் விளக்கம் தரவும்.

    ReplyDelete
  9. Thajudeen ,
    You saved my time . Thank you . It is very pleasing to
    note that "self criticism" is growing among the
    community . Well done.

    ReplyDelete
  10. Raskan Ahmed,

    Well said ! Apologists will come out with lame answers.
    There are plenty of contradictions on many things like
    this if we take time to read THOUGHTFULLY without being
    blindly biased . There are crystal clear contradictions
    that we need to understand before someone else from
    another religion or an atheist point it out to us in
    full mockery . One should be first true to himself .
    We like it or not ,KORAN has become a commodity that
    anyone can buy regardless of whether you are a Muslim
    or non-Muslim . And everybody is boasting that it has
    been translated in hundreds of languages. The point
    here should be not about the number of languages but
    about the number of EDUCATED PEOPLE READING THEM LINE
    BY LINE WITH THEIR READING EXPERIENCE . WHEN ALMOST
    ALL MUSLIMS READ IT EYES CLOSED , NON-MUSLIMS READ IT
    EYES WIDE OPENED . PLEASE KEEP THAT IN MIND.

    ReplyDelete
  11. AMJI, you are spot on !

    ReplyDelete
  12. Allah has furnished the human-beings with restricted sense. The folks who give footnotes here must realize it. Some folks think that they're too smart.
    Whoever wish or disgust, as Muslims we're committed to abide by our beloved prophet's command.

    ReplyDelete
  13. Allah has furnished the human-beings with restricted sense. The folks who give footnotes here must realize it. Some folks think that they're too smart.
    Whoever wish or disgust, as Muslims we're committed to abide by our beloved prophet's command. Piety on Allah is the only gauge to evaluate the people.

    ReplyDelete
  14. Let's try to grasp the essence of the article . Perseverance n sabr above all The reward for this sterling virtues in Ahira nothing any contraversial .
    All in All the message is cristal clear.
    No hair splitting plz.
    Good article.

    ReplyDelete
    Replies
    1. My views too fall in with you, brother...

      Delete
  15. மாஷாஅல்லாஹ் ! இஸ்லாமிய விபசாரவிடுதி பற்றிய அழகிய கட்டுரை .. உங்களை போன்றவர்கள் தான் இந்த உலகத்திற்கு ஆதிக்கம் தேவை து !

    ReplyDelete
  16. Inamdeen ,

    You are elegant in that "Islamic" SHIRT AND TIE!Don't change
    it , you look perfect for Hoorul Inns !

    ReplyDelete
  17. What's wrong in tie and shirt ? What is Islamic dress ?
    As long as you cover according to how sharia prescribed that's Islamic dress.
    Some idiots think that wearing kameez( jubba) is Islamic dress because prophets had worn it and it's sunnah.
    If we ask those incorrigible prophets travelled by camels will you travel by camels they don't have answers.
    Imagine you live in Norway or arctic hemisphere can you wear Jubba and wear it above ankle level ?
    We may have less knowledge about certain things. What we have to understand that f islam has said something and it's authentic hadeeth. We have to believe it. Believe in unseen also part of Islam. Because our brain is not advance Enough to understand that.
    Having doubts will take you to KUFR.
    Please abstain from such thoughts.
    And stop thinking that if someone wore Shirt and Tie he is unislamic.
    Allah will look at your hearts and if you abide the limits of shariah.

    ReplyDelete
  18. VoiceSrilanka

    I happened to visit this page by accident after about a
    week and missed your VERY INTELLIGENT point . There are
    enough Hadeeth about how to dress, for both men and
    women . Anyway , it is very FUNNY TO SEE this Voice man
    crying foul about Tie and Shirt and calling JUBBA wearing
    innocent people IDIOTS . Some INTERNATIONAL IDIOTS don't
    understand a thing except giving into the habit of
    barking. They think blabbering a bit of Islamic verses
    will make them scholars of Islam. I am a collared shirt
    wearing man too and this is the shirt nearly more than
    90% of Srilankan Muslims wear. Wearing it as a cover is
    one thing and exhibiting it as an honour with a tie is
    another thing . I want to ask this ISLAMIC SHOLAR VOICE
    SRILANKA , IS THIS WEB PAGE FREEZING IN ARCTIC ?

    ReplyDelete

Powered by Blogger.