பதவி விலகத் தயார் - சம்பந்தன்
மக்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால் தான் பதவி விலகவும் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தவைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முடியாவிட்டால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களும் தங்களின் பதவிகளை துறந்துவிட்டு எம்மோடு வீதியில் இருந்து போராட வரவேண்டும் என கேப்பாப்புலவு காணிகளுக்காக போராடும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
மக்களுக்கு உரிய தீர்வு ஒன்று கிடைப்பதற்கு பதவி விலகுவது தான் காரணம் என்றால், பதவி விலகுவது என்பது எனக்கு புதிய விடயமல்ல.
இவ்வாறு மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக இதற்கு முன்னரும் பதவி விலகும் சூழல் வந்தபோது எனது பதவியிலிருந்து நான் விலகினேன்.
இருந்தாலும் தற்போது இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வதற்காக பக்குவமாக செயற்படவேண்டியுள்ளது.
அத்துடன் மக்களது காணி போராட்டம் தொடர்பில் மக்களின் மன நிலையினை புரிந்துகொள்ள வேண்டும், அவற்றை உதாசீனம் செய்யக்கூடாது.
அந்த வகையில், மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நம்பிட்டோம்ம்ம்!??,அவைகள்களை நம்பினால் வீதீபில் தான் வாழும் மக்கள்
ReplyDelete