Header Ads



பௌத்த நாட்டில், எங்கே மனிதாபிமானம்..?

கம்பளை பிரதேசத்தில் பெற்ற தாயை நடு வீதியில் விட்டு சென்ற மகன் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால், கம்பளை நகரம் மிகவும் மக்கள் நிறைந்து காணப்பட்டுள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மகன், தாயை அநாதரவாக விட்டுச் சென்றுள்ளார்.

எனினும் பேருந்து நிலையத்தில் தாயை தனியாக விட்டுச் சென்ற நிலையில், கம்பளை பொலிஸ் அதிகாரிகளால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

தனது மகனுடன் கம்பளைக்கு வருகைத்தந்துள்ளதாகவும், தன்னை அங்கு விட்டு சென்று விட்டதாக குறித்த தாய், பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் திருமணம் செய்து விட்டனர். ஒரு மகள் கம்பளை பிரதேசத்தில் உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள், அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் போது, அதற்கு எதிர்ப்பு வெளியிட்டவர் தன்னை மீண்டும் காணாமல் ஆக்க செய்ய வேண்டாம் என அழுது புலம்பியுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. ஓரிருவர் செயலுக்காக ஒரு மதத்தை இழுக்கக் கூடாது. ஓரிருவர் செய்வதற்காக மொத்த இஸ்லாத்தை குற்றம் சொல்வது போலத்தான் இதுவும்.

    ReplyDelete

Powered by Blogger.