தனியார் துறையிலும், மகப்பேறுகால விடுமுறை - அமைச்சர் ஜோன்
அரச துறையில் அமுலில் இருக்கும் யை தனியார் துறையிலும் அமுல்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க விவகார அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -06- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இதற்கான சட்டமூல வரைவு திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச துறையில் பணிப்புரியும் பெண்களுக்கு மகப்பேறுக்காக 84 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படுகிறது.
எனினும் தனியார் துறையில் இதற்கும் குறைவான விடுமுறை காலமே வழஙகப்படுகிறது.
இரண்டு துறைகளிலும் தொழில் புரியும் பெண்களுக்கு சம உரிமையை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment