பாம்புக்கு கருணை காட்டியவர், பாம்பினால் கடியுண்டு வபாத்
வாகனமொன்றில் மோதுண்டு துடித்துக் கொண்டிருந்த பாம்பை, மனிதாபிமான முறையில் எடுத்து காட்டுக்குள் விடுவதற்கு முயன்ற நபரொருவர் பாம்புக்கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம், மூதூர் வேதந்தீவு பகுதியில் நேற்று (11) இடம்பெற்றுள்ளது.
மூதூர், பாலநகரைச் சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் வாஹீத் (வயது 60) என்பரே, பாம்பு கடிக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment