அரச அலுவலக வேலை நேரத்தில் மாற்றம்
அரசாங்க அலுவலக வேலை நேரத்தில் மாற்றம் மேற்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சரவை அனுமதியின் கீழ் 3 மாதங்களுக்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக பத்தலமுல்லையில் அமைந்துள்ள நிர்வாக நகரத்தை கேந்திரமாக கொண்டு எதிர்வரும் நாட்களில் செயற்படுத்துவதாக திட்டமிட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூப்பசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அரச நிர்வாக அமைச்சுடன், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு கலந்துரையாடல் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நினைவு வருவது சந்திரிக்கா அம்மையார் காலம் தான்
ReplyDelete