வடை விற்ற முதலமைச்சர் 7 மாடியில் ஹோட்டல் - ஜனாதிபதியிடம் முறையிட்டும் பயன் இல்லை
ரயிலில் வடை விற்று பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் எவ்வாறு ஏழு மாடி கொண்ட ஹோட்டல் அமைக்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ரயிலில் கூவி வடை விற்று பிழைப்பு நடத்திய ஊவா மாகாணசபையின் முதலமைச்சர் சாமர சம்பத், எல்ல பிரதேசத்தில் ஏழு மாடிகளைக் கொண்ட ஹோட்டல் ஒன்றை அமைக்கின்றார்.
இதற்கான பணம் அவருக்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றது? சாமர சம்பத் இந்தப் பணத்தை வீட்டிலிருந்து கொண்டு வந்தாரா?
ரயிலில் வடை விற்று, பாக்கு விற்று ஹோட்டல் அமைக்க முடியும் என்றால் அது பிரமாதமானது.
ஹோட்டல் அமைப்பதற்கு பயன்படுத்தும் பணம் பொதுமக்களினுடையது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த ஊழல் மோசடி குறித்து தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியை சந்தித்து நான் கூறியிருந்தேன்.
எனினும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. எல்ல பிரதேசத்தில் அமைக்கும் ஹோட்டலில் 42 அறைகள் காணப்படுகின்றன.
இது குறித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய உள்ளேன் என சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
Post a Comment