Header Ads



சிறிலங்காவுக்கு 6300 கோடி ரூபா வழங்குகிறது ஜப்பான், 42 மில்லியன் யூரோ வழங்குகிறது EU

மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை ( 45 பில்லியன் யென்) சிறிலங்காவுக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது.

ஜப்பான் வழங்கவுள்ள 6300 கோடி ரூபா நிதியில் இரண்டு கடன் உதவித் திட்டங்களாகும். ஒன்று கொடைத் திட்டமாகும்.

2

சிறிலங்காவின் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தவதற்கும், நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கும், 42 மில்லியன் யூரோவை ஐரோப்பிய ஒன்றியம் உதவியாக வழங்க முன்வந்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்காவின் நிதியமைச்சர் செயலர் சமரதுங்கவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் டங் லாய் மார்கேயுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் 6ஆம் நாள் உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டு திட்டங்களுக்காக 42 மில்லியன் யூரோவை (6791.4 மில்லியன் ரூபா) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது.

இதில். விவசாயத்துறையை நவீன மயப்படுத்துவதற்கு 30 மில்லியன் யூரோவும், நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்துவதற்கு 12 மில்லியன் யூரோவும் ஒதுக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஜேர்மனியின் சமஷ்டி வெளிவிவகாரப் பணியகம் 2.4 மில்லியன் யூரோவையும், பிரிட்டிஷ் கவுன்சில் 0.1 மில்லியன் யூரோவையும் நல்லிணக்கத் திட்டங்களுக்காக பங்களிப்பு செய்யவுள்ளன.


2 comments:

  1. இனி கடன் வாங்கப் போவதில்லை என அறிக்கைவிட்டார்களே.... கடன் வாங்கத்தானா பிரதமர் போனார் என்பது இப்பதானே புரியுது.

    ReplyDelete
  2. Cast in same mould. No radical difference between the previous regime and this so-called good governance.

    ReplyDelete

Powered by Blogger.