ஒவ்வொரு பிரஜையும் 5 இலட்சம் கடனாளி
இன்றைய நிலையில் 9 லட்சம் கோடிகளை இலங்கை கடனாக கொண்டுள்ளது என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிலையில், இலங்கை நாடும், நாட்டு மக்களும் 9 லட்சம் கோடிகளை கடனாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.
9 இலட்சம் கோடிகள் என்பது சாதாரண தொகை அல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செலுத்துவதற்கு முயல வேண்டும்.
இவ்வாறான நிலை ஏற்படக்காரணம் தேவையற்ற செலவுகளே. கடந்த காலத்தினால் ஏற்பட்ட திருட்டு கொள்ளைகள் மூலமாகவே இத்தகைய பாரிய தொகையினை இலங்கை தொலைத்துள்ளது.
அதேபோன்று, எயார் லங்காவினால் ஏற்பட்ட நட்டத்தினால் நாட்டின் ஒரு நபர் 36 ஆயிரம் ரூபா வரை கடனாளியாக மாறிவிட்டனர்.
அதனால் நாட்டில் திருடர்களை இல்லாமல் செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் முறைப்பாடு செய்ய வேண்டும்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் நாட்டின் நீதி முறையாக செயற்படுகின்றது. எதிர்காலத்தில் ஒரு நல்ல நாடாக இலங்கை மாறும் என ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த இந்த நாடுகள் கோடி கோடியாக இலங்கைக்கு கொடுக்குறாங்க என்று சொல்லுறாங்க பிறகு ஒவ்வொரு நாட்டு பிரஜை 5 இலட்சம் கடனாளியாக இருக்கிறார்கள் என்று சொல்லுறாங்க!!
ReplyDeleteஅத உங்க அரசாங்கத்திடமும் மந்திரிங்களிடமும் சொன்னீங்கன்னா நல்லாயிருக்கும்!
ReplyDelete