சிறிலங்காவில் வரட்சி - நிவாரணம் வழங்குவதில் 3 நாடுகளிடையே கடும் போட்டி
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வரட்சியைச் சமாளிப்பதற்கு 1 பில்லியன் ரூபா பெறுமதியான 90 நீர்த்தாங்கி பாரஊர்திகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.
சீன மக்கள் ஆலோசனை கலந்துரையாடல் சபையின் தேசிய குழு தலைவரான யூ செங்சென் சிறிலங்காவுக்கு கடந்த 6ஆம் நாள் தொடக்கம், 8ஆம் நாள் வரை மேற்கொண்டிருந்த பயணததின் போது இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளார்.
சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலையை சமாளிப்பதற்கும்.சிறிலங்கா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு 44 மில்லியன் ரூபா பெறுமதியான பணியக கருவிகளை வழங்கவும் சீனா முன்வந்துள்ளது.
நான்கு பத்தாண்டுகளில் சிறிலங்கா மோசமான வரட்சியைச் சந்தித்துள்ளது. வரட்சியை எதிர்கொள்வதற்கு உதவுமாறு சிறிலங்கா வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதற்கு 10 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் கட்டம் கட்டமாக சிறிலங்காவுக்கு அனுப்பி வருகிறது.
இந்தியா 8 குடிநீர் தாங்கி பார ஊர்திகளை வழங்கியுள்ளதுடன், 100 மெட்றிக் தொன் அரிசியையும் அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சீனா 90 குடிநீர் தாங்கி பாரஊர்திகளை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment