இனவாத செயற்பாடுகள் தொடர்பிலான பல தகவல்கள் அம்பலம் - 'மஹசோன் பலகாய' வின் 2 உறுப்பினர்கள் கைது
'மஹசோன் பலகாய' எனும் அமைப்பின் உறுப்பினர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் இருவர் ஒரு தொகை இனவாத போஸ்டர்களுடன் அம்பலாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31, 26 வயதுகளை உடைய இருவரே இவ்வாறு கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் இனவாத செயற்பாடுகள் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(எம்.எப்.எம்.பஸீர்)
Post a Comment