Header Ads



16 ஆவது நாளாக முஸ்லிம்களின் சத்தியாக்கிரகம், அரசாங்கம் தொடர்ந்தும் மெளனம்

ஜனா­தி­ப­தியால் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வெளியி­டப்­பட்ட வன பாது­காப்பு பிர­க­டன வர்த்­த­மா­னியை இரத்துச் செய்­யக்­கோரி கடந்த 28 ஆம் திகதி ஆரம்­ப­மான முசலி மக்­களின் சத்­தி­யாக்­கி­ர­கப்­போ­ராட்டம் 16 ஆவது நாளா­கவும் இன்று தொடர்­கி­றது.

மறிச்­சுக்­கட்டி தக்­கியா பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் முசலி பிர­தே­சத்தைச் சேர்ந்த மக்கள் தமது கோரிக்­கை­க­ளுக்கு ஜனா­தி­பதி செவி சாய்க்­கும்­வரை சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் தொடர்ந்தும்  ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

மறிச்­சுக்­கட்டி, பாலக்­குழி, கர­டிக்­குழி மற்றும் ஹுனைஸ் நகர், கொண்­டச்சி, அகத்தி முறிப்பு, வேப்­பங்­குளம், பொற்­கேணி ஆகிய கிராம மக்கள்  இப்­போ­ராட்­டத்தில் பங்கு கொண்­டுள்­ளனர்.

இதே­வேளை, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெரும்­பான்­மை­யின பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு ஒன்று சித்­திரை புது­வ­ரு­டத்தை தொடர்ந்து அங்கு செல்­ல­வி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இது இவ்­வாறி­ருக்க அர­சாங்­கத்தின் வனத்­து­றைக்கு பொறுப்­பான அமைச்­சர்­களும் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு பொறுப்­பான அமைச்­சரும் இவ்­வி­ட­யத்தில் தொடர்ந்தும் கரி­ச­னை­யின்றி அம்­மக்­களை புறக்­க­ணித்து வரு­வ­தாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மக்கள் குற்றம் சுமத்தி வரு­கின்­றனர்.

அத்துடன் ஜனாதிபதி வர்த்தமானியில் கையொப்பமிட்டதுபோல்  எமது போராட்டத்தை முடித்து வைக்க இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தமக்கு நியாயம் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அத்துடன் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

-ARA.Fareel-

No comments

Powered by Blogger.