Header Ads



கொலன்னாவையில் அனர்த்தம், 100 வீடுகள் பாதிப்பு, உடனடி நிவாரணத்திற்கு ஜனாதிபதி பணிப்பு

கொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இன்று குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழ ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தினால் சுமார் 40 வீடுகள் வரை சேதமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரின் 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2

இன்று பிற்பகல் சரிந்து விழுந்த கொலன்னாவை, மீதொட்டுமுல்லை குப்பை மேடு காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். குறித்த இடத்துக்கு முப்படையினர் மற்றும் பொலிஸார், தீயணைப்பு படையினர் வருகைதந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இந்த சம்பவத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குப்பை மேட்டின் மேல் பகுதியில் தீப்பற்றியுள்ளதுடன்,  பெக்கோ இயந்திரம் ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, விமானப்படையிருக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

3
இன்று பிற்பகல் சரிந்து விழுந்த கொலன்னாவை, மீதொட்டுமுல்லை குப்பை மேடு காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இந்த சம்பவத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குப்பை மேட்டின் மேல் பகுதியில் தீப்பற்றியுள்ளதுடன்,  பெக்கோ இயந்திரம் ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, விமானப்படையிருக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

1 comment:

  1. What a man made desaster! People living in such a filthy stinking mess . What on earth going on in SL.
    Environment authority / agents should b taken to task.

    ReplyDelete

Powered by Blogger.