முஸ்லிம்களுக்கு எதிரான, அநாகரிகமான விடயங்கள் நடைபெறுகின்றனவா..?
விளக்கமறியலில் உள்ளவர்களை காணச் செல்வதனைத் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் குற்றஞ் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆண்டாண்டு காலமாக உள்ள முறைக்கும் ஏனைய நாடுளிலுள்ள நடைமுறைக்கும் இணங்க விளக்கமறியலில் உள்ளவர்களைப் பார்ப்பது சம்பந்தமாக அவர்களுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுமதி வழங்குவது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது ஏராளமானவர்கள் விளக்கமறியலில் உள்ளவர்களை காணச் செல்லுகின்றமையினால் அதன் மூலமாக அங்குள்ளவர்களின் மனம் மாறி அரசாங்கத்திற்கு மாறிச் செல்வார்கள் என்ற அச்சத்தின் காரணமாக தற்காலிக சிறையில் உள்ளவர்களை காண்பதற்கு தடைசெய்வதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது பெரும் அராஜகச் செயலாகும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள மிகவும் அநாகரிகமான, அமானிச, இன விரோத சக்திகளுக்கு ஒப்ப இந்த நாட்டிலும் விடயங்கள் நடைபெறுகின்றனவா? என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப வேண்டியிருக்கின்றது. எனவே இவைகளை விட்டு விட்டு அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் ஏராளம். ஏராளம் அவைகளைத் தீர்ப்பதற்கு அரசிடம் இருந்து உத்தரவாதங்களைப் பெறுமாறு முஸ்லிம் முற்போக்கு முன்னணி வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.
90 வீதமான முஸ்லிம்கள் வாக்களித்தார்கள் என்று கூறுவார்களானால் ஏன் இந்த அங்கலாய்ப்பு? ஏன் இந்த அழுகைக்குரல்? மௌலவி ஆசிரியர் நியமனம், மாணிக்கக் கல் வியாபாரம் முதல் வீதியிலே அங்காடி வியாபாரம் செய்கின்ற சாதாரண முஸ்லிம் வியாபாரிகள் வரை எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்,ஒட்டோ சாரதிகள் போன்ற இன்னோரன்ன பொதுமக்கள் பலவாறும் கஷ்டத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாகி இருப்பது ஏன்? என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
அமெரிக்க பைத்தியகாறனின் கொள்கைகளை தான் ஆதரிப்பதாக உங்கள் தலைவர் மஹிந்த அண்மையில் பேசி இருக்கும் போது நீங்கள் அவனை கூடாது என்று சொன்னால் இதில் எது உண்மை? காட்டிக்கொடுத்தும் கூட்டிக்கொடுத்தும் அரசியல் இலாபம் தேடும் உங்களைப்போன்ற பச்சோந்திகளால்தான் முஸ்லிம்கள் இந்த நிலையை அடைய காரணமாக அமைந்துள்ளது.
ReplyDelete