அம்பாந்தோட்டை நோக்கி விரையும், அமெரிக்க அதிவேக கப்பல்
அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான ‘யுஎஸ்என்எஸ் போல் ரிவர்’ (USNS Fall River) சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது.
சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து சிறிலங்கா நோக்கி நேற்று -03- இந்தக் கப்பல் புறப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் முதலாவது மனிதாபிமான மற்றும் அனர்த்த, நிவாரண முன்னாயத்த ஒத்திகையை மேற்கொள்வதற்காக, அமெரிக்க கடற்படையின் இந்த அதிவேக போக்குவரத்துக் கப்பல் அம்பாந்தோட்டை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
அவுஸ்ரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200 இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் இந்த ஒத்திகையில் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஒத்திகையில் யுஎஸ்என்எஸ் போல் ரிவர் உதவிக் கப்பலாகப் பங்கேற்கவுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனா குத்தகைக்குப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில் அமெரிக்க கடற்படைக் கப்பல் இங்கு ஒத்திகையை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment