ஹசன் அலி, முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி, முக்கிய அறிவிப்பொன்றை நாளை (03) விடுக்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அவர் தலைமையில், நிந்தவூர் பெரிய பள்ளிவாசலில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
நேற்றிரவு 7:45க்கு ஆரம்பமான இக்கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்பட்ட இறுதி முடிவு தொடர்பில் எவ்விதமான தகவல்களும் வெளியாகவில்லை.
இதேவேளை, புதியக் கட்சியொன்றை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி, கடந்த மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைந்தமையால், அவர் தலைமையில் அல்லது அவருடைய ஆலோசனையின் பேரில் புதிய கட்சியொன்று பதிவு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று தெரியவந்துள்ளது. எது எவ்வாறோ, முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வெகுஜனப் போராட்டங்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பு தப்பு தப்பு முஸ்லிமகளின் உருமைகளுக்காக என்ற சொல்லை மாற்றி எனகு கட்சியில் கேட்ட பதவி கிடைக்காமையால் என்று சொல்லவும் கட்சிக்குள் எத்தனைபேருக்குத்தான் பதவிகள் கொடுக்கமுடியும்?நீங்கள் முஸ்லிம் மக்களின் உருமைகளில் அக்கறை உள்ளவகராக உண்மையிலிருந்தால் தயவு செய்து பதவிகளை இளயதலைமுறைகளுக்கு விட்டுகொடுங்கள்!
ReplyDeleteபதவி கொடுக்காதலால் ஏற்படும் ஆதங்கம், இங்கே பதவியோ ரூபாவோ கொடுத்திருந்தால் எல்லாம் அடங்கும், உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் வளத்தெடுத்த எல்லா போராளிகளும் இவைகள் இல்லாதபோது சமுகப்பற்றோடு வெளியே வருவார்கள்...அல்லாஹ் போதுமானவன்.
ReplyDelete@ Faizar m well said bro!
ReplyDelete