Header Ads



அர்ஜூன மஹேந்திரனுக்கு எதிராக, சாட்சியமளித்த மொஹமட் ஆசிம்

அரச கடன் திணைக்களத்தில் சேவையாற்றும் காலப்பகுதியில் முறி ஏலத்தின் இடைநடுவில் மத்திய வங்கி ஆளுனர் ஒருவர் அந்த திணைக்களத்திற்கு வந்தமையை தாம் முதன்முறையாக அபூர்வமாக கண்டதாக திணைக்களத்தின் முன்னாள் மேலதிக அதிகாரி மொஹமட் ஆசிம் தெரிவித்தார். 

சர்ச்சைக்குறிய முறி ஏலத்தின் போதே ஆளுனர் அங்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார். 

குறித்த முறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த போதே அவர் இன்று (02) இந்த தகவல்களை வெளியிட்டார். 

திறைசேரி முறி விற்பனை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று ஆறாவது நாளாக கூடியது. 

அந்த குழுவின் முன்னிலையில் இன்று, இலங்கை மத்திய வங்கியின் அரச கடன் திணைக்களத்தின் முன்னாள் மேலதிக அதிகாரி மொஹமட் ஆசிம் சாட்சியமளித்தார். 

சட்டமாஅதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி மன்றாடியார் நாயகம் நிலந்த நாவன, மொஹமட் ஆசிமிடம் விசாரணையை ஆரம்பித்த அதேவேளை, கடன் திணைக்களத்தின் மேலதிக அதிகாரி பதவியை வகித்த போது குறித்த திணைக்கத்தின் உயர் அதிகாரியாக செயற்பட்டவர் யார் என வினவினார். 

அதற்கு பதிலளித்த ஆசிம், கடந்த 2015-02-09 திகதிவரை அந்த பதவியில் தம்மிக்க நாணாயக்கார என்பவர் பதவி வகித்ததாக குறிப்பிட்டார். 

அதனையடுத்து அந்த பதவியில் ஈ.டீ.என்.செனவிரத்ன என்ற பெண்மணி பதவிக்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.