யானைத் தாக்குதல்: வேடிக்கை பார்த்த பொதுமக்கள் - தம்புள்ளையில் சோகம் (படங்கள்)
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி, வீதியில் காயத்துடன் விழுந்து கிடந்த நபரை, அவ்வழியாகச் சென்றவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்த்துச் சென்ற சம்பவமொன்று, தம்புள்ளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இன்று -03- அதிகாலையில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கானவர், மயக்கமடைந்த நிலையில், வீதியோரத்தில் விழுந்து கிடந்துள்ளார்.
அவ்வழியாக சென்ற வாகனங்கள், காயமடைந்த நபருக்கு அருகில் நின்றும், அவரைக் கொண்டுச் செல்ல விருப்பமில்லாமல் சென்றுவிட்டதாக அயல்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை - பக்கமுன பிரதான வீதியில் 13ஆவது மைல்கல் பகுதியில் பயணித்த போதே குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
Post a Comment