குவைத்தில் இலங்கையரை, தீயிட்டு கொளுத்திய இலங்கையர்
குவைத் நகரில் ஒரே அறையை பகிர்ந்து வந்த இலங்கை பெண் உறங்கிய போது, அவரை இலங்கையை சேர்ந்த இளைஞனே தீயிட்டு கொளுத்திய சம்பவம் குவைத் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் ஒரே அறையை பகிர்ந்து வந்த இலங்கையை சேர்ந்த இளைஞன், தனது அறையில் தங்கிவந்த பெண்ணை தூங்கும் போது ஒருவகை திரவத்தை ஊற்றி, தீயிட்டு கொளுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளதாக, அந்நாட்டு பொதுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு செய்திகள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இரவு நேரத்தில் குறித்த அறையிலிருந்து காப்பாற்றும் படி சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் தீயில் எறிந்த பெண்ணை, காப்பாற்றுவதற்கு முயற்சித்துள்ளதாகவும், ஆனால் அவர்களால் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து பெண்ணை காப்பற்ற முடியாது போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அறையில் பெண்ணுடன் வசித்து வந்த இலஞ்சம் அறையிலிருந்து தப்பித்து சென்றுள்ளார். பின் பொலிஸாரினரால் குறித்த இளைஞன் மடக்கி பிடிக்கப்படவே, இளஞனின் கால் மற்றும் கைகளில் தீ தடயங்கள் காணப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனை குவைத் பொலிஸார் விசாரித்த போது, பெண் தானாக தீ மூட்டி, தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இளைஞனின் வாக்கு மூலத்தை நம்பாத பொலிஸார், கடுமையாக விசாரித்துள்ள நிலையில், குறித்த இளைஞனே பெண் உறங்கும் போது, அவர் மீது ஒருவகை எரியூட்டி திரவத்தை ஊற்றி தீயிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனிடம், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அவருக்கெதிராக சட்ட நடவடுக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குவைத் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment