கனடா பிரதமருக்கு, இலங்கை முஸ்லிம்கள் வாழ்த்து
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு பிரதிநிதிகளுக்கும், என்.எம். அமீன் தலைமையிலான முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி, இன நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் கனடா குழுவினருக்கு தெரியப்படுத்தினர்.
அத்துடன் கனடா பிரதமர் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் பற்றியும் அறிந்துவைத்துள்ளமையும் வியந்து பாராட்டிய இலங்கை முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் கனடா பிரதமருக்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பில் தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்ததாக என்.எம். அமீன் குறிப்பிட்டார்.
We all respect & wish him all the best!
ReplyDeleteMay Allah blessing him & given Hithaya.. Ameen!