யாழ் பல்கலைக்கழக முஸ்லிம், மஜ்லிஸின் இன்கிலாப் வெளியீட்டு நிகழ்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வெளியீடான இன்கிலாப் சஞ்சிகையின் ஏழாவது மலர் எதிர்வரும் மார்ச் நான்காம் திகதி பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் பிற்பகல் 02:30 மணியளவில் வெளியிடப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் கௌரவ அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், மற்றும் யாழ்பல்கலைக்கழக பீடாதிபதிகள் பேராசிரியர் திருமதி. ரீ மிகுந்தன், பேராசிரியர் சுதாகரன், கலாநிதி ஏ.அற்புதராஜா, பேராசிரியர் ரீ.வேல்நம்பி, வைத்திய கலாநிதி எஸ் ரவிராஜ், பேராசிரியர். ஆர். விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் முஸ்லிம் மஜ்லிஸ் காப்பாளர் சிரேஸ்ட விரிவுரையாளர் ஏ.ராசகுமாரன் மற்றும் பெரும் பொருளாளர் தொழிநுட்பபீட பீடாதிபதி பேராசிரியர் எஸ். சற்குணராஜா ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
நூல் திறனாய்வை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் விஷேட சொற்பொழிவு, மற்றும் கலை கலாசார நிகழ்சிகளும் இடம்பெறவுள்ளன.
யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் 1977 ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வரும் இன்கிலாப் (சிந்தனைப் புரட்சி) சஞ்சிகை பல அறிஞ்ரகளினதும் பல்கலைக்கழக மாணவர்களினதும் கருத்தாக்கங்களைத் தாங்கிவரும் கனதியான படைப்பாகும். 1977 முதல் வெளிவந்த இம்மலர் 1987ம் ஆண்டு தனது ஐந்தாவது வெயீட்டின் பின்னர் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களின் நிலவுகையின்மையால் அடுத்த இதழ் வெளிவருவதில் 27 வருடம் அவகாசம் எடுத்திருந்தது.
இன்கிலாபின் ஆறாவது மலர் கடந்த 2015ம் ஆண்டு மீண்டும் முஸ்லிம் மஜ்லிஸினால் வெளியடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏழாவது மலர்இவ்வருடம் வெளியிடப்படவிருக்கின்றது.
Alhamdhulillah.
ReplyDeleteBest wishes. I have the copy of 1987 publication.
ReplyDelete