Header Ads



'தம்புள்ளை பள்ளிவாசலைப் பாதுகாப்போம்' - நாடு பூராக கையெழுத்துத் திரட்டும் பணி

'தம்புள்ளை பள்ளிவாசலைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளின்கீழ் நாடு பூராகவும் கையெழுத்துத் திரட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கையெழுத்து வேட்டை ஐக்கிய சமாதான முன்னணியின் ஏற்பாட்டில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

மருதானை சாஹிரா பள்ளி வாசல் முன் கையெழுத்துத் திரட்டப்பட்டது.  நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்தப் பணி முன்னெடுக்கப்படும்.

தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இனவாதிகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர். நல்லாட்சியும் இதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

எனவே, பள்ளிவாசல் பாதுகாக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தியே இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது" என்று ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் மிப்லார் தெரிவித்தார்.

1 comment:

  1. Alhamdhulillah ! a pivotal initiative. Each Muslim has to uphold this movement.

    ReplyDelete

Powered by Blogger.