தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்கு, தீர்வை வழங்குக - சம்பிக்கவிடம், ஹலீம் கோரிக்கை
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் தான் அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அடுத்தவாரம் அமைச்சர் ஹலீமுடன் மீண்டுமோர் சந்திப்பினை நடாத்தி விரிவாக ஆராய்வதாகக் கூறினார். இதேவேளை, அடுத்தவாரம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் கலந்துரையாடியதன் பின்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் தீர்மானத்தை விளக்கி அவர்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் சவாலுக்குள்ளாகி வருகின்ற நிலையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுப்பது முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கடமையாகும். எனவே இவ்விவகாரத்தில் தான் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாகவும் கூறினார். தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை பள்ளிவாசலுக்கான காணியை இனங்கண்டுள்ள நிலையில் எவ்வளவு காணி பள்ளிவாசலுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதிலே நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் கூறினார்.
இந்தப் பிரச்சினையை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குரலில் கருத்து வேறுபாடுகளின்றி தீர்த்து வைப்பதற்கு முன்வர வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தங்களைக் கொடுத்தால் நிச்சயம் நல்ல தீர்வினை எய்த முடியும்.
தம்புள்ளையின் முஸ்லிம்கள் புதிதாக ஒரு பள்ளிவாசலை நிர்மாணிக்க கோரவில்லை. பலதசாப்த காலமாக இயங்கி வரும் பள்ளிவாசலை நல்லிணக்க நோக்கோடு இடம்மாற்றிக்கொள்ளவே விரும்புகிறார்கள் என்பதை இதற்கெதிராக செயற்படுபவர்கள் உணரவேண்டும் என்றார்.
பாரிய நகரம் மற்றும் மேற்குப்பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் பள்ளிவாசல் நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் மற்றும் தம்புள்ளை விகாரையின் தேரர்களை தனது அமைச்சின் காரியாலயத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தையொன்றினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. இப்பேச்சுவார்த்தையின் போது பள்ளிவாசலுக்கென இனங்காணப்பட்டுள்ள காணியில் 20 பர்ச் நிலமே வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
என்றாலும் பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசலுக்கு 80 பர்ச் காணியும் தற்போது பள்ளிவாசல்களைச் சூழ வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள 28 குடும்பங்களுக்கு அப்பகுதியில் காணியும் வழங்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை பள்ளிவாசலின் வரைபடம், காணியின்உறுதி, பள்ளிவாசலின் யாப்பு, அமைச்சர் ஹலீமின் சிபார்சுக் கடிதம் என்பனவற்றை ஏற்கனவே பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பிக்க செய்த வேலையை தான் முன்பு ரவூப் ஹக்கீம் என்னும் ஒரு முஸ்லீம் நபர் செய்து வந்தார் ஆனால் ஏன் அவரின் காலத்தில் தம்புள்ள பள்ளிவிவகாரத்தில் ஒரு முடிவு செய்யவில்லை!
ReplyDeleteWhat is your opinion regarding that issue. Not empty reguest.
ReplyDelete