Header Ads



'எங்கிருந்தாலும் 2 வாரங்களுக்குள் கொல்லப்படுவாய்' - கொல்லப்பட்டவன் விடுத்திருந்த எச்சரிக்கை


'எங்கிருந்தாலும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கொல்லப்படுவாய். கவனமாக இரு' என நுகேகொட லொக்காவுக்கு கொலை செய்யப்பட்ட 'சமயங்க' எனப்படும் அருண தமித் உதயங்க எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் இந்த எச்சரிக்கையின் பின்னரே பதிலடி கொடுக்கும் வகையில் களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழிவாங்கும் நோக்கிலேயே இரு பாதாள குழுத் தலைவர்களான 'அங்கொட லொக்கா' மற்றும் 'கம்புறுபிட்டி மதுஷ்' ஆகியோரால் களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 10 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்ய ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

எனினும் குறித்த நபர்கள் தொடர்ந்து இடமாறிக்கொண்டு இருப்பதாகவும் இதனாலேயே அவர்களை கைது செய்ய முடியாமல் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருவதாகவும் இதனால் கட்டுநாயக்க, மத்தல விமான நிலையங்கள் மற்றும் கடலோரங்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி திங்கட்கிழமை (27) காலை 8.30 மணியளவில் களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லையில் இருந்து கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு பாதாள உலகக்  கோஷ்டி  சந்­தேக நபர்­களை ஏற்றி வந்த சிறைச்­சாலை பஸ் வண்டி மீது  களுத்­துறை, மல்­வத்த - எத்­த­ன­ம­டல பகு­தியில் வைத்து சர­ம­hரி­யான துப்­ப­hக்கிச் சூடு நடத்­தப்­பட்­டது.

இத் தாக்குதலில்   பஸ் வண்­டியில் இருந்த பிர­பல பாதாள உலகக் கோஷ்­டியின்  தலை­வ­னான  சமயங்க எனப்படும் அருண தமித் உத­யங்க பத்­தி­ரண உள்­ளிட்ட 5 கைதி­களும் இரண்டு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.