Header Ads



தென் கொரியாவுக்கு, செல்ல விரும்புகிறீர்களா..? 14,15,16,17ஆம் திகதிகளில் விண்ணப்பங்கள் விநியோகம்

கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 14, 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில்  விநியோகிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதுமுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அலுவலகங்கள் மற்றும் பிராந்திய பயிற்சி நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள், 18 தொடக்கம் 39 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்த முறை தேர்வு உற்பத்தி மற்றும் கடற்றொழில் என்பவற்று நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.