இலங்கையில் அமையவுள்ள World Capital Center செயற்றிட்டத்தில் தாமதம்
இலங்கையில் அமைக்கப்படவுள்ள World Capital Center செயற்றிட்டம் உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த நான்காம் திகதி உத்தியோகபூர்வமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போதும், அது நடைபெறவில்லை.
இந்நிலையில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுமா என கொழும்பு ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தன.
எனினும் அவ்வாறான நிகழ்வு ஏற்படாமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
இலங்கையில் மிகவும் உயர்ந்த கட்டடத்திற்காக முதலீடு செய்த உலகின் மிகசிறந்த 4 நட்சத்திர பிரபலங்கள் நாட்டுக்கு வருவதாக இருந்தது.
இருந்த போதிலும் அவர்களின் நாட்களை ஒதுக்கிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையினாலே அன்றைய தினத்தில் அடிக்கல் நாட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.
எனினும் தற்போதுவரையில் இலங்கையில் உள்ள மிகப்பெரிய காணி ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் இது தொடர்பிலான தகவல் பகிரங்கப்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய கட்டடத்திற்கு அடிக்கல் வைக்கும் நிகழ்வு மிகப் பிரம்மாண்டமாக எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்மூலம் உலகின் மிகவும் உயர்ந்த கட்டடம் என்ற தரப்படுத்தலில் இலங்கையும் இணைந்து கொள்ளவுள்மை குறிப்பிடத்தக்கது.
Post a Comment