'SLMC தலைமைத்துவத்தை மாற்ற நினைப்பது கனவாகவே போகும்''
-பாறுக் ஷிஹான்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மாபெரும் மக்கள் இயக்கமானது சுமார் 36 வருடத்திற்கு மேலாக இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஏக சொத்தாக இறைவன் உதவியோடு முஸ்லிம்களின் அரசியல் இருப்பை நிலைநாட்டி வருகின்ற கட்சி என்றால் அது மிகையாகாது.
அவ்வாறானதொரு நிலைபேற்றிற்க்கு மறைந்த ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இட்ட அடித்தளமும் அவரை பின்பற்றி இன்றைய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களும் மேற்கொண்டுவரும் சானக்கியம் கலந்த நெறிப்படுத்தலுமே காரணமேயன்றி வேறில்லை.
ஸ்தாபகத் தலைவரின் அகால மரணத்திற்குப் பின் பலத்த சவால்களுக்கு மத்தியில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற தலைவர் ஹக்கீம் அவர்கள் சுமார் 16 வருடங்களுக்கு மேலாக கட்சியை பாதுகாக்க மேற்கொண்டு வரும் பிரயத்தணத்தையும் தியாகத்தையும் எண்ணி தான் அகமகிழ்ந்தாலும் அக்கட்சியையும் அதன் தலைமைத்துவத்தையும் சின்னா பின்னமாக்க சில துரோகிகள் காலத்துக்குக் காலம் கட்சிக்குள்ளே இருந்து கட்சியை காட்டிக் கொடுக்கும் நிலையினை எண்ணிதான் கவலையடைவதாகவும் வடமாகண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரசின் உயர்பீட உறுப்பினறுமாகிய எச்.எம்.றயீஸ்,
கடந்த 28 ம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவுத் வெளியிட்டிருந்த செவ்விக்கு எதிராக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சகோதரர் பசீர் சேகுதாவுத் சாதாரணமாக ஒரு அரசியல் கட்சிக்குள் நடைபெறும் விடயங்களையை பெரிய பூதாகரமாக்கி, தலைவர் ஹகீம் மீது சேறு பூசும் வகையில் அபான்டமாக வெளியிட்ட கருத்துக்களை இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
கட்சியின் வரலாற்றுப் பாதையில் முஸ்லீம் காங்கிரஸும் அதன் தலைமையும் பல்வேறு துரோகிகளின் துரோகத்தனத்திற்கு முகம் கொடுத்துள்ள நிலையில் இவரைப் போன்று எத்தனை துரோகத்தனதனமிக்கவர்கள் ஒன்று சேர்ந்தாளும் முஸ்லிம் காங்ரசின் தலைமைத்துவத்தை மாற்ற நினைப்பது எம்மைப்போன்ற உண்மையான போராளிகள் இருக்கும் வரை அது கனவாகவே போகும். அவ்வாறான துரோகிகளுக்கு ஒரு போதும் தாம் இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா அவர்களிடம் மு.கா தலைவர் தனது சுய லாபத்துக்கு சமூகத்தை அடகு வைத்ததாக பொய் குற்றச்சாட்டை சுமத்துகின்ற பசீர் சேகுதாவுத் மஹிந்த ராஜபக்ஷவிடம் வைத்திருந்த கல்லக் காதல் செய்தியை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அவர் எழுதிய இராஜினாமா கடிதம் மூலம் இறைவன் மக்களுக்கு காட்டியதை இவ்விடத்தில் நினைவுகூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் தேசியபட்டியலுக்கும் அமைச்சுப் பதவிக்கும் கட்சிக்குள்ளே இருந்து விட்டு தேசிய பட்டியல் கனவு நிறைவேற போவதில்லை என தெரிந்ததும் உண்ட வீட்டுக்கு குந்தகம் செய்ய துணிந்துள்ள இவரைப்போன்ற கேடுகெட்ட நபர்களை சமூகம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். முஸ்லிம் காங்ரசில் அரசியல் அறிமுகம் பெற்று அமைச்சுப்பதவிக்காக வெளியேறி முஸ்லிம் காங்ரஸை அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் கட்சிகளை ஆரம்பித்து முஸ்லிம் என்ற நாமத்தை கூட தனது கட்சியின் பெயரில் வைத்துக்கொள்ள முடியாத அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் முன்னால் அமைச்சர் அதாவுல்லா போன்றோர்கள் மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு ஆதரவளித்த அனைத்து தேர்தல்களிலும் மஹிந்தவினை எதிர்த்து நின்ற தலைமை எங்கள் மு.கா தலைமை என்பதை அனைவரும் சீர்த்தூக்கிப்பார்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
அமைச்சுப் புதவிக்கும், முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் ஆசுவாச பேச்சுக்கும் சோரம் போன பசீர் சேகுதாவுதின் பேச்சைக்கேட்டே கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலின் போது முஸ்லிம் காங்ரஸ் சார்பாக போட்டியிட இருந்த முன்னால் மு.கா உயர்பீட உறுப்பினர்கள் பலரை கட்சிமாற்றி வெற்றிலைச் சின்னத்தில் அன்றைய அரசின் நேரடித் தெரிவாக போட்டியிட வைத்ததையும், அவர்கள் அனைவரும் அதிரடி தோல்வி கண்டதையும், இறுதிக்கட்டத்தில் தலைவர் ஹக்கீம் எடுத்த சானக்கிய முடிவின் காரணமாகத்தான் மு.கா. தனித்து போட்டியிட்டு ஆசனத்தை வென்று வட மாகாண சபைக்கு தான் சென்றதையும் இந்நேரத்தில் ஞாபகமூட்டிக் கொள்கிறேன்.
தலைவர் அஷ்ரப் அவர்களையும் வன்னியின் மைந்தன் மர்ஹும் நூர்தீன் மசூர் அவர்களையும் நேசிக்கின்ற வட மாகாண முஸ்லிங்கள் ஒரு போதும் பணத்திற்கோ பதவிக்கோ சோரம் போனவர்களின் துரோகத்தனமிக்க, பொய்யான செய்திகளை கண்டு கொள்ளப்போவதில்லை என்ற செய்தியை முழு நாட்டிற்கும் எத்திவைப்பதாகவும் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் யாப்பு மாற்றத்தில் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பெற்றுக்கொள்ளப் போகின்ற அரசியல் தீர்வை வரவேற்க அனைவரையும் திடசங்கற்பம் பூணுமாறும் தான் கேட்டுக் கொள்வதாக வட மாகான சபை உறுப்பினர் றயீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளர்
நான் பஷீர் சேகுதாவூத் போன்ற சந்தர்ப்பவாதிகளை ஆதரிக்கும் நபரல்ல. அவர் இப்போது செய்து திரியும் செயலானது "மேலே பார்த்து உமிழும்" அற்பச் செயல்.
ReplyDeleteமேலே சொல்லப்பட்ட தலைப்பை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் சகோதரர் ரவூப் ஹக்கீம் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின்னிருந்து இன்றுவரை செய்ததெல்லாம் அவரது தலைமைத்துவ இருப்பை மிக்கத் திறமையாக தக்கவைத்துக் கொண்டமை தான். அதில் அவர் "முதுமாணி" (Doctorate) முடித்தவர். சமூகத்துக்கு அபிவிருத்தி அல்லது உரிமை ரீதியான பங்களிப்பு சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் செய்யாவிடிலும் அவரது இருப்பை இறுகவே வைத்துக் கொள்வதில் திறமையானவர். SLMC மூழ்கும்வரை அவர்தான் "சாணக்கியத் தலைவர்".
மக்களே!
இனிமேலாவது மார்க்க அறிவு மற்றும் சமூக அக்கறை "குறைந்த பட்சம்" உள்ளவர்களையாவது தேர்ந்தெடுங்கள். இல்லாதவர்களை அனுப்பி மண்ணை வாரிக்கொள்ளாதீர்கள்.
ries ena cash sa chak ka
ReplyDeleteஹக்கீம் அவர்களின் சாணாக்கியங்கள் இதோ..
ReplyDelete** தலைவர் அஷ்ரப் அவர்களின் கடைசி காலத்தில் கட்சியின் முக்கிய தீர்மானகளையும், அரசியல் முன்னெடுப்புக்களையும் ரணிலின் ஒற்றனாக செயட்பட்டு ரணிலுக்கு தகவல்களை கொடுத்தது.
** ரணிலின் ஒற்றனாக செயட்பட்டமையினால் சந்திரிக்கா அம்மையாரின் மந்திரிசபையில் இருந்து விரட்டியடிக்கப்பட்டமை.
** தனது அரசியல் ஆண்மையற்ற, திறமையற்ற, கொள்கையற்ற தனத்தினால் றிசாத், அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றவர்கள் அரசியலில் தனிக்காட்டு ராஜாக்களாக வலம் வந்து கொண்டிருப்பது.
** ஒஸ்லோ பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம்களையும் தனித்தரப்பாக பங்கு கொள்ள வைக்க முடியாத சாணக்கியம். அங்கே ஆண்மாடும் விளங்காமல் பெண்மாடும் விளங்காமல் முழிச்சு கொண்டு திரிந்த நேரம் எம் ஐ எம் மொஹிடீன் அவர்களை ஒரு மாதிரியா உள்வாங்கியது. இந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் புறக்கணிக்க பட்ட காரணத்தினால் முஸ்லீம் வாக்குகள் ரணிலுக்கு எதிராகவும், ராஜா பக்ஸவுக்கு சார்பாக திரும்பியது. இப்படியான சூழ்நிலையில் சாணாக்கிய தலைவன் ரணிலை ஆதரித்தது. சும்மா கிடந்த அதாவுல்லா றிசாத் எல்லாம் அரசியல் தலைவர்களாக பரிணமித்தது.
** படு கேவலமாக, அரசியல் பொன்னத்தனமாக ராஜபக்சவுடன் சங்கமித்தது. அதாவது ராஜபக்சவின் வைப்பாட்டி ( எந்தவித உரிமையும் கிடையாது, அந்தஸ்தும் கிடையாது ) போல் நடந்து கொண்டது.
** பள்ளிவாசல்கள் உடைப்பு, பொதுபல சேனா, அளுத்காம, திவினுக்கமா, கசினோ, தபால் மூல வாக்கெடுப்பு நடந்து முடியும் வரை, தருசலாம் கட்டிடம்..... etc.
பாரூக் ஷிஹான், ரயீஸ் அவர்களே, உங்களுக்கும் உங்கள் சாணக்கிய தலைவர் அவர்களுக்கும் அரசியல் என்றால் என்ன என்று தெரியுமா?? உரிமை என்றால் என்ன என்று தெரியுமா? உரிமை போராட்டம் என்றால் என்ன என்று தெரியுமா?? உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசியல் சித்தாந்தங்கள் எப்படியெல்லாம் நடந்தேறியது என்ற ஒரு சிறு துளியாவது தெரியுமா?, புரியுமா?
ராசா..நாங்கள் மிகவும் மன்றாடி கேட்கிறோம், சற்று சிந்தியுங்கள், நமது எதிர்கால சந்ததியை சிந்தியுங்கள்.... இலங்கையின் அரசியல் சரித்திரத்திலேயே மிகவும் சுயநலமான, பலகீனமான, அரசியல் அறிவும், சமூகத்தின் உணர்வும் அற்ற ஒரு தலைமைத்துவம் தான் சகோதரர் ஹக்கீம் அவர்களின் தலைமைத்துவம் எனவே இதில் கட்டாயம் மாற்றம் வேண்டும். அதை நாகரீகமான முறையில் செய்து கொள்வது சகோ. ஹக்கீம் அவர்களினதும், அவரது அடிவருடிகளான உங்களை போன்றவர்களினதும் கைகளில் தான் உள்ளது. நிட்சயம் மாற்றம் வரும் அதுதான் நியதி.
Sanekyeam
ReplyDelete