NFGG யின் சுதந்திர தின நிகழ்வு !
இலங்கையின் 69 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியி(NFGG)னால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வு நேற்று (04.02.2017) காத்தான்குடியில் இடம்பெற்றது. காத்தான்குடியில் அமைந்துள்ள NFGG யின் பிராந்திய காரியாலய வளாகத்தில் காலை 08.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
பெருந்திரளானோர் கலந்து கொண்ட இந்நிகழ்வின் முதற்கட்டமாக தேசியக் கொடியினை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. NFGGயின் காத்தான்குடி பிராந்திய தலைமைத்துவ சபையின் சிரேஸ்ட உறுப்பினர் SMM. பஸீர் ஆசிரியரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பிரதான உரையினை ஆற்றினார். NFGGயின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், அதன் கொள்கை பரப்புச் செயலாளர் சிராஜ் மசூர் ஆகியோரும் இந்நகழ்வின் போது உரைகளையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து NFGGயினால் அண்மையில் நடாத்தி முடிக்கப்பட்ட இலவச அப்பியாசக் கொப்பி விநியோகத்தில் பலவகையான பங்களிப்புக்களையும் செய்த உறுப்பினர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அத்தோடு, NFGGயின் காத்தான்குடி பிராந்திய சபை செயலாளர் MACM.ஜவாஹிர் ஆசிரியர், அதன் சிரேஸ்ட உறுப்பினர்களான AGM.ஹாறூன் , சபீல் நழீமி உள்ளிட்ட பலரும், அதேபோன்று NFGG யின் மகளிர் அணியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் பிரதேச பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment