Header Ads



சபாநாயகரின் ஆசனம் கீழே விழுந்தது, நல்லாட்சிக்கு சரியில்லையாம் - சப்தமிட்டு சிரித்த MP கள்

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்  சபாநாயகரின் ஆசனம் கிழே விழுந்தது. இது  அனைவரினதும் அவதானத்திற்கு உள்ளானது.

மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் சட்ட ஒழுங்குவதி தொடர்பான விவாதம் நடந்து கொண்டிருக்கையில்  சபைக்கு தலைமை வகித்த ஆனந்த குமாரசிறி எம்.பி தலைமை பொறுப்பை சேஹான் சேனசிங்கவிற்கு வழங்க முற்பட்ட போது சபாநாயகர் ஆசனம் கீழே விழுந்தது.

இதன்போது சபையில் பேசிய கூட்டு எதிரணி எம்.பி மஹிந்தானந்த அழுத்கமகே இதுவரைக்கும் இல்லாத வகையில் சபாநாயகர் ஆசனம் கீழே விழுந்து விட்டது. அரசாங்கத்திற்கு சகுணம் சரியில்லை என தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழகிழமை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டத்தின் ஒழுங்குவிதிகள்  மீதான விவாத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சிவநேசன் உரையாற்றி கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவரது உரையை இடை நடுவில் நிறுத்திய சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சபை தலைமை பொறுப்பை கூட்டு எதிரணி எம்.பி சேஹான் சேனசிங்கவிற்கு வழங்குவதாக அறிவித்து விட்டு எழுந்தார். 

ஆனந்த குமாரசிறி எம்.பி ஆசனத்தில் இருந்து எழுந்தவுடன் சபாநாயகரின் ஆசனம் கீழே விழுந்தது. இதன்போது சோவிதர்கள் இணைந்து ஆசனத்தை தூக்கி வைத்தனர். இது அனைவரினதும் அவதானத்திற்கு உள்ளானது.  இதன்பின்னர் சேஹான் சேனசிங்க ஆசனத்தில் அமர்ந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் எழுந்து பேசிய மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி பேசுகையில்,

இலங்கை வரலாற்றில் இதுவரை காலமும் இல்லாமல் சபாநாயகரின் ஆசனம் கீழே விழுந்துள்ளது. இது முதற் தடவையாகும். ஆகவே நல்லாட்சி அரசாங்கத்திற்கு சகுணம் சரியில்லை. இவர்களது பயணம் நீண்ட காலம் நீடிக்காது என்றார் . இதன்போது சபையில் அனைவரும் சப்தமிட்டு சிரித்தனர்.

No comments

Powered by Blogger.