Header Ads



டிரம்புக்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும், ஒபாமாவே IS உருவாக காரணம் - அயத்துல்லா அலி காமெனி

அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக உள்நாட்டுப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்தார். மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டார். அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில், தலைவர் அயத்துல்லா அலி காமெனி ஈரான் ராணுவ கமாண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:-

டிரம்புக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், அமெரிக்காவின் உண்மையான முகத்தை டிரம்ப் காட்டிவிட்டார். அமெரிக்காவின் ஆளும் அமைப்பில் அரசியல், பொருளாதார, அறம், சமூக ஊழல் நிலவி வருகிறது என்று நாம் 30 ஆண்டுகளாக கூறிவந்தோம். இப்போது, நாம் கூறிவந்தது உண்மையே என்பதை டிரம்ப் நிரூபித்துள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரமும் சரி, வெற்றிக்குப் பிறகான நடவடிக்கைகளிலும் சரி அவர் அமெரிக்காவின் உண்மையான முகத்தை காட்டி வருகிறார்.

அமெரிக்க விமான நிலையத்தில் 5 வயது ஈரான் பையன் கையில் விலங்கு மாட்டியதிலிருந்தே அமெரிக்க மனித உரிமைகளின் உண்மையான அர்த்தத்தை டிரம்ப் உலகத்திற்கு காட்டிவிட்டார். 

ஈரான் நெருப்புடன் விளையாடுவதாக டிரம்ப் கூறுகிறார் , மேலும் ஒபாமா அளித்த சலுகைகளுக்கு நாம் நன்றியுடன் இல்லை என்கிறார் ட்ரம்ப், ஆனால் உண்மையில் ஒபாமாதான் ஈரானை முடக்கும் பொருளாதார, ராணுவ தடைகளைப் பிறப்பித்தார், ஒபாமாவின் செயல்களால்தான் இராக், சிரியாவில் ஐ.எஸ் அமைப்பு உருவானது, ஐஎஸ் உருவாக ஒபாமாவின் சில நடவடிக்கைகளே உதவியது.

என தலைவர் அயத்துல்லா அலி காமெனி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.