'தம்புள்ளை முஸ்லிம்கள் புதிய பள்ளிவாசலை கேட்கவில்லை, சிங்களவர்கள் நன்கு புரியவேண்டும்'
தம்புள்ளை பிரதேசத்தில் முஸ்லிம்கள் புதிதாக ஒரு பள்ளிவாசலைக் கேட்கவில்லை. இருக்கும் பள்ளிவாசலுக்கு பதிலாகவே ஒன்றைக் கேட்கிறார்கள். அதுவும் காணியையே கேட்டுள்ளார்கள். கட்டித் தரும்படி கேட்கவில்லை.
இதை சிங்கள மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என தபால், தபால் சேவைகள் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் கடந்த திங்களன்று நடந்த கூட்டமொன்றில் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை எழுப்பப்பட்ட போதே அமைச்சர் ஹலீம் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் விளக்கமளித்த அவர்,
தம்புள்ளை பிரதேசத்தில் புதிதாக ஒரு பள்ளிவாசல் கட்ட முயற்சிகள் நடைபெறுவதாக அநேகர் நினைக்கின்றனர். ஆனால் அது புதிய பள்ளிவாசல் அல்ல. புனித பூமி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்படவுள்ளது. அதற்குப் பதிலாக தம்புள்ளை நகருக்கு வெளியே காணி வழங்கப்படவுள்ளது. அதிலேயே பள்ளிவாசல் கட்டப்படவுள்ளது. இதை மக்கள் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும்.
தம்புள்ளை நகர முஸ்லிம்களும் தமது காணிகளிலிருந்து வெளியேற்றப்படவுள்ளனர். அவர்களுக்கும் காணிகள் வழங்கப்படவுள்ளன. எனவே இவை புதியவை அல்ல. இடம் மாறுதலே நடக்கிறது என்றார்.
ARA.Fareel
Mr. Haleem mp, go and meet the people who are collecting 1000000 signatures in this regard
ReplyDelete