பாரிய பொருளாதார நெருக்கடி, ஜனாதிபதி நிபுணர் அல்ல, சம்பந்தனுக்கு விழிப்புணர்வு இல்லை
இலங்கை அரசாங்கம் வரலாறு காணாதவகையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது அரசாங்கத்தின் கணக்கு உள்ள மொத்த வெளிநாட்டு ஒதுக்கம் 120 பில்லியன் மாத்திரமே என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் உட்பட முழு அமைச்சரவையும் இந்த நெருக்கடி தொடர்பில் எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி பொருளாதார நிபுணர் அல்ல என்பதனால் அவருக்கு நாட்டின் உண்மையான நிலை மறைக்கப்பட்டுள்ளதாக என சந்தேகம் எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு நாட்டின் உண்மையான பொருளாதார நெருக்கடி தொடர்பில் நிதி அமைச்சர் அல்லது நிதி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படாத நிலை ஒன்றே காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இது தொடர்பில் எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பது குறித்து சிங்கள ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளது.
அதற்கமைய சர்வதேச நிறுவனத்தினால் வெகு விரைவில் இன்னும் கீழ் மட்ட பொருளாதார தரப்படுத்தப்படுத்தலுக்குள் இலங்கை இணைக்கப்படும் எனவும், கடன் வழங்குவதற்கு தகுதியான நாடு அல்ல எனவும் அறிவிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக சர்வதேசம் அறிவிக்கும் நிலை காண்பபடுவதாக ஊடகம் ஒன்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நிலையினால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், அதிகளவான விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Ayyo...this article may concern the wake-up of Mahinda & regime....?
ReplyDelete