ஆண் வேடத்தில் வந்த, ஈரான் பெண்கள் வெளியேற்றம்
ஈரானில் கால்பந்து போட்டிகளை பெண்கள் காண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து ஆண் வேடம் அணிந்து மைதானத்திற்குள் நுழைந்த பல இளம் பெண்களை தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஞாயிறன்று டெஹ்ரானில், ஈரானின் மிகப் பிரபலமான இரண்டு அணிகள் விளையாடும் கால்பந்து போட்டியை காண முயன்ற எட்டு பெண்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஈரானில் 1979 ஆம் ஆண்டு புரட்சி நடைபெற்றதிலிருந்து கால்பந்து போட்டிகளையும் பிற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பெண்கள் காண தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுடன் ஒரே அரங்கில் இருக்கும் போது பெண்கள் முகம்கொடுக்கும் ஆபாசமான வார்த்தை பிரயோகங்களை தவிர்க்க இந்த தடை அமுல்படுத்தப்பட்டு வருவதாக ஈரான் வாதிடுகிறது.
எனினும் பெண்கள் விளையாட்டு அரங்கிற்குள் ஊடுருவ முயன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன.
என்னதான் ஷீஆ நாடென வாதிடப்பட்டாலும் இஸ்லாத்திற்கு நெருக்கமானதும்
ReplyDeleteதுணிச்சலானதுமான முடிவுகள் அங்கிருந்துதான் வெளிவருகின்றன!
இதனை ஈமானியப்பலம் என்றும் சொல்லலாம்.