சிவப்பு அரிசியில், சாயம் பூசப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு
கண்டி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட சிவப்பு நாட்டரிசி மாதிரிகளில் கபில நிற வர்ணம் (சாயம்) பூசப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.
பேராதனை அரிசியில் கலப்படம் செய்வதால் பல்வேறு தீய விளைவுகள் ஏற்படுவதாகவும் அதனைத் தடுக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டிகொண்டனர். பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் தோல் நோய்கள் தொடர்பான பிரிவினர் மேற்கொண்ட ஒரு ஆய்வின் போது மேற்படி விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக தகவலை ஒத்திவைக்கவே தம்மால் முடியும் என்றும் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமது பிரிவிற்கு இல்லை என்றும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எனவே சிவப்பு நாட்டரிசியை வாங்கும் போது அவதானமாக இருக்க வேண்டும் என்றும் நீரில் கழுவும் போது கலப்படம் செய்யப்பட்ட நிறம் நீங்குவதைக் கொண்டு சாதாரண பொது மக்களும் அதனைத் தெரிந்து கொள்ள முடியும் என்றும் அப்படியான அரிசிகளில் சேர்க்கப்பட்டுள்ள இரசாயனம் உடல் நலத்திற்கு தீங்கு பயப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக செனட் கட்டடத்தில் இவ் அமர்வு இடம்பெற்றது.
Post a Comment