சவுதி அரேபியாவின் பங்குச்சந்தை, வங்கி தலைமை நிர்வாகிகளாக பெண்கள் நியமனம்
சவுதி அரேபியாவில் பங்குச் சந்தையின் தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு, அந்நாட்டின் முக்கிய வங்கி ஒன்று பெண் ஒருவரை அதன் தலைமை நிர்வாகியாக நியமித்துள்ளது.
சம்பா நிதிய குழு, ரனியா மகமத் நஷார், அதன் தலைமை நிர்வாகியாக பணியில் நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்தது.
மூன்று நாட்களுக்கு முன்னர், சரா அல் சுஹைமி சவுதி பங்கு சந்தையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
வீழ்ச்சியடைந்து வரும் எண்ணெய் விலைகளை சரி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்த்திருத்தங்களின் ஒரு பங்காக, பணிகளில் அதிக பெண்களை நியமிக்க சௌதி அரேபியா முயற்சித்து வருகிறது
ஆனால் சௌதியின் பெண்கள் தங்களின் பல செயல்களுக்கு கணவன் அல்லது ஆண் உறவினரின் அனுமதியை பெறும் பாதுகாவல் அமைப்பின் கீழ்தான் வாழ்ந்து வருகின்றனர்.
They are try show the world that, they save women's rights! If anyone check internally that appointed few ladys should be from sheikh's family/VIP
ReplyDelete