இலங்கையிலிருந்து ஹஜ், செல்பவர்களே ஏமாந்துவிடாதீர்கள்
-ARA.Fareel-
ஹஜ் தரகர்கள் இவ்வருடம் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்துள்ளவர்களிடமிருந்து கடவுச்சீட்டுகளையும் தரகுப்பணமும் அறவிட்டு வருவதாக ஹஜ் குழுவிற்கு தினமும் முறைப்பாடுகள் கிடைத்துவருவதாகவும் அவ்வாறு தரகுப்பணம் செலுத்தவோ கடவுச்சீட்டுகளை கையளிக்கவோ வேண்டாமென ஹஜ் விண்ணப்பதாரிகளை ஹஜ் குழு அறிவுறுத்தியுள்ளது.
அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி மொஹம்மட் தாஹா சியாத் வெளியிட்டுள்ள அறிவித்தலின் தெரிவித்துள்ளதாவது, இவ்வருடத்துக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாகக் கூறி சிலர் தரகுப்பணம் அறவீடு செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பில் ஹஜ் விண்ணப்பதாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அடுத்தவாரம் ஹஜ் குழு மாவட்டங்கள் தோறும் ஹஜ் கருத்தரங்குகளை நடத்தவுள்ளது. ஹஜ் கடமைக்காக செல்பவர்கள் தமது பயணத்தை 25 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்துவதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டணம் அவர்கள் பயணிக்கும் முகவருக்கு மாற்றம் செய்யப்படும்.
அதனால் அம் முகவர் கட்டணத் தொகையிலிருந்து 25 ஆயிரம் ரூபாவை கழித்துக் கொள்வார்.
ஹஜ்குழு 50 ஆயிரம் ரூபாவை மீளப்பெறக்கூடிய கட்டணமாக அறிவித்திருந்தாலும் ஹஜ் பயணிகளின் வசதிகருதி அக்கட்டணம் 25 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
Post a Comment