''ஹக்கீம் ஏமாற்றிவிட்டார்'' சமூகத்தையும், கட்சியையும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும் - ஹசன் அலி வேதனை
கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீட கூட்டத்திலிருந்து நான் வெளியேறியதும் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னைப் பின்தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து ' என்னை மன்னித்து விடுங்கள்.
பல சந்தர்ப்பங்களில் நான் உங்கள் மனதைப் புண்படுத்தி விட்டேன் என்றார். அரை மணித்தியாலம் அவரது முகத்தைப் பார்க்காமலே இருந்தேன்.
பின்பு லீடர் நீங்கள் திரும்புங்கள். நான் ஓய்வாக இருக்க விரும்புகிறேன் என அவரை அனுப்பி வைத்தேன்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
கடந்த 11ஆம் திகதி தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அவசர கட்டாய உயர்பீடக் கூட்டத்தின் போது கட்சியின் செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டதையடுத்து இதுவரை காலம் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றிய எம்.ரி. ஹசன் அலி பதவியிழந்தார்.
இதுதொடர்பில் ஹசன் அலியை 'விடிவெள்ளி' தொடர்பு கொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கண்டி பொல்கொல்லையில் நடைபெற்ற பேராளர் மாநாட்டின் போது எனது செயலாளர் பதவிக்குரிய அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மற்றுமோர் செயலாளர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நான் சகல அதிகாரங்களையும் கொண்ட செயலாளர் பதவியே வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தேன். அதையே கேட்டேன். செயலாளர் பதவியுடன் தேசியப் பட்டியலில் உறுப்பினர் பதவியையும் தருவதாக பல தடவைகள் வாக்குறுதி வழங்கிய கட்சியின் தலைவர் என்னை ஏமாற்றிவிட்டார்.
கடந்த பேராளர் மாநாட்டின் நியமனங்களுடன் எனது 30 வருட அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.
தவிசாளர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர்களால் என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. விநயமாகக் கேட்கப்பட்டது. ஒருவரிடமிருந்து பறித்தெடுத்து தரும் பதவியை ஏற்றுக்கொள்ளும் வழிகெட்ட ஆள் நான் இல்லை எனக்கென்று தனித்துவம் உள்ளது. எனது தனித்துவத்தை எவருக்கும் அடகு வைக்க மாட்டேன். தவிசாளர் பதவியை கடைசிவரை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றேன்.
செயலாளர் பதவியை வகிப்பவர் தேர்தலில் போட்டியிட முடியாது என யாப்பிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தலைவரே உங்கள் பிரச்சினை நான் தானே? எனக்காகத்தானே இதெல்லாம். நானே கூறுகிறேன். செயலாளர் பதவியை ஒருவருக்கே கொடுங்கள். ஒரு கட்சியில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளே முக்கியமானவை. இவற்றை மலினப்படுத்த வேண்டாம் என்று உச்சபீட கூட்டத்தில் தலைவரிடம் தெரிவித்தேன்.
12ஆம் திகதி நடைபெற்ற பேராளர் மாநாட்டுக்கு எனக்கு அழைப்பிதழ் தரவில்லை. தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். ஆனால் எனக்குத் தபாலில் அழைப்பிதழ் கிடைக்கவில்லை.
எனது செயலாளர் பதவி விவகாரம் 1 1/2 வருட காலமாக தேசியப் பட்டியல் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இப்போது தலைவர் எனது விவகாரத்திக்கு முடிவு கண்டு விட்டார்.
பேராளர் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் எழுதுவது தொடர்பான வேலைகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்திலே நடைபெறுவது வழக்கம். ஆனால் இம்முறை அனைத்துப் பணிகளும் தலைவரின் அமைச்சு காரியாலயத்திலே இடம்பெற்றுள்ளன.
பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் பற்றி எனக்கு அறியக்கிடைத்தது. அந்தத் தீர்மானங்களில் 30 வருட காலமாக இருந்து வந்த கரையோர மாவட்டக் கோரிக்கை இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. மறைந்த தலைவரின் அபிலாஷையாக இது இருந்தது.
இந்தக் கோரிக்கையை நான் ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன். கட்சியில் நான் இல்லாத வெறுமையை இன்று உணர்கிறேன். சமூகத்தையும் கட்சியையும் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும் என்று துஆ கேட்கிறேன் என்றார்.
ARA.Fareel விடிவெள்ளி
Hassan! It is good you out? when Rauff is going to be out?
ReplyDeleteஐயா,
ReplyDeleteஅநியாயம் செய்யப்பட்டவர்களின் துஆ உடனடியாக அங்கீகரிக்கப்படும் என்பது நபிமொழி.
நீர் அந்நிலையில் இருந்தால் உமது துஆ சமூகத்தின் ஆரோக்கியத்துக்காய் வேண்டி அமையட்டும்.
ஆனால் ஒன்று மட்டும் ஐயா, உங்களது பதவி பறிக்கப்படாமல், கூடவே தேசியப்பட்டியல் உங்களுக்கு கிடைத்திருந்தாலும், இந்த சமூகத்தை அல்லாஹ்தான் பாதுகாப்பான், (எப்பவும் போல).
கடந்த காலங்களில் உங்களது கட்சி, இந்த சமூகத்துக்கு ஏதாவது அநியாயம் செய்து இருந்தால்; (உங்கள் மனட்சாட்சியிடம் கேளும்) நீங்களும் அதட்கு பொறுப்புதாரியே, அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இனிமேல் அந்த கட்சி செய்யும் அநியாயங்களிட்கு பொறுப்பு கூறும் ஆபத்திலிருந்து அல்லாஹ் உங்களை காப்பாற்றி விட்டான் என்று நினைத்து கொள்ளும், மனம் சமாதானம் அடையும்.
@Abdul சரியாகச் சொன்னீர்கள்.
DeleteOh oh oh
ReplyDeleteEntha katci varathukku mun samokathayum makkalum athe Allah than pathukathan
ReplyDeleteMUSLIMS IN SRI LANKA, ESPECIALLY IN THE NORTH EAST TOO NEED A "NEW POLITICAL FORCE", A POLITICAL FORCE THAT WILL FIGHT AGAINST THE AMALGAMATION OF THE NORTH AND EAST AS MANUPILATED BY THE TNA, WIGNESWARAN AND NOW BY KARUNA AMMAN WITH HIS NEW POLITICAL TAMIL PARTY, “THE TAMIL UNITY FREEDOM PARTY” ANNOUNCED IN BATTICALOA YESTERDAY, INSHA ALLAH.
ReplyDeleteWILL THAT MEAN THE MUSLIMS IN SRI LANKA WILL ALSO NEED A "NEW POLITICAL PARTY" INSHA ALLAH. HASSANALI, BAZEER SEGU DAWOOD, NAJEEB MAJEED, HISBULLAH, CADER MASTHAN, ATTAULLAH. Y.L.S.HAMEED AND ALL MUSLIM POLITICIANS AT GRASS-ROOT LEVEL SUPPORTING “KILAKKIN ELUCHI MOVEMENT” SHOULD GATHER TO FORM THIS “NEW MUSLIM POLITICAL FORCE”. TIME IN THE NEAR FUTURE WILL SHOULD GIVE AN ANSWER TO THIS, INSHA ALLAH
Noor Nizam, Convener - "The Muslim Voice".
எவனுக்கு எது நடந்தால் என்ன - எனக்கு ஏதாவது கிடைத்தால் போதும் என்று அலையும் எமது சமூகத்தில் - இவன் ஹக்கீம் போன்றவர்களின் காலம் ஏறுமுகமாகவே இருக்கும்..........
ReplyDeleteஇதுதான் எமது சமூகத்தின் தலை விதி.............
ஆயினும் அல்லாஹ்வின் பிடி படு பயங்கரமானது........ அதில் இருந்து எந்த ஹக்கீம்களும் தப்ப முடியவே முடியாது........
எவனுக்கு எது நடந்தால் என்ன - எனக்கு ஏதாவது கிடைத்தால் போதும் என்று அலையும் எமது சமூகத்தில் - இவன் ஹக்கீம் போன்றவர்களின் காலம் ஏறுமுகமாகவே இருக்கும்..........
ReplyDeleteஇதுதான் எமது சமூகத்தின் தலை விதி.............
ஆயினும் அல்லாஹ்வின் பிடி படு பயங்கரமானது........ அதில் இருந்து எந்த ஹக்கீம்களும் தப்ப முடியவே முடியாது........
I think it is the time for the Eastern people think long enough, and decide the next move. If not it will be a disasster for there future. Because of some one makings decision not you select to look in to your affairs.
ReplyDelete@Muslim Way! Change your name to Eastern Muslim Way or change Muslim Congress name to Eastern Muslim congress and appoint someone a leader from eastern.
DeleteTo everyone!
ReplyDeleteI am not from eastern. I am telling my views. people will deside. My views always push for a better society. Not a puppet society. People have there true powe to run there society. This we lack in our society. Some power stealing this power from people. We all need to work for it.