Header Ads



உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு, ஆதரவளிக்க போவதில்லை - மகிந்த

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க போவதில்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சிக்கே ஆதரவளிக்கப் போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் புத்தளத்திலுள்ள இல்லத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். இந்த தேர்தல் தீர்மானமிக்கதாக இருக்கும்.

வடக்கில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை எழுந்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. நீண்டகாலத்திற்கு முன்னர் இதனை கூறியிருந்தேன்.

பாதுகாப்பு படையினரும், இராணுவத்தினரும் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ளனர். புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படியான நிலைமையில் பிரச்சினைகள் எழுவது குறித்து ஆச்சரியப்படத்தேவையில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.