'ஜனாதிபதித் தேர்தலில், கோத்தபாயவினால் வெற்றிபெற முடியும்' - கலாநிதி தயான்
நாட்டில் தற்போது நடந்து வரும் அரசியல் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பகுதி நேர வகுப்புக்கு செல்லாமல் கூட 2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான பட்டப்படிப்பை படித்து விட்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது மிகவும் தகுதியானதாக இருக்கும் என தயான் ஜயதிலக்க தனது முகநூல் பக்கத்தில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக வினவப்பட்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
2019ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாயவினால் வெற்றிபெற முடியும். அப்படி நடந்தால் அது இலங்கையின் எதிர்காலத்திற்கு நன்மையாக இருக்கும். அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் நான் முழுமையான ஆதரவை வழங்குவேன் என தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment